- Advertisement -

திருச்சி விமான நிலையத்தில் 46 கிலோ சுறா மீன் துடுப்புகள் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்!

- Advertisement -

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான மூலம் சிங்கப்பூர் செல்ல இருந்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் பயணி ஒருவர் சுமார் 46 கிலோ எடையுள்ள பதப்படுத்தப்பட்ட சுறா மீன் துடுப்புக்களை மூன்று சாக்கு பைகளில் மறைத்து கடத்தி செல்ல இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதே போல மற்றொரு பயனியை சோதனை செய்ததில் அவர் உரிய அனுமதியின்றி ₹.6.80 லட்சம் வெளிநாட்டு கரன்சிகளை வைத்திருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து அந்த கரன்சிகளையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Bismi

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்