திருச்சி மாநகராட்சி சார்பில் விழுப்புரம் மாவட்டத்திற்கு 37,500 உணவு பொட்டலங்கள் அனுப்பி வைப்பு!

ஃபென்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்திற்கு திருச்சி மாநகராட்சி சார்பில் 37,500 உணவு பொட்டலங்கள், 1750 பிரட் பாக்கெட்டுகள், 1000 குடிநீர் பாட்டில்கள் மற்றும் 1000 பிஸ்கட் பாக்கெட்கள் புயலால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு வழங்குவதற்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பொருட்கள் அடங்கிய வாகனத்தை மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து மேயர் அன்பழகன் கொடியசைத்து அனுப்பி வைத்தார். இத்துடன் மாநகராட்சியின் இரண்டு இளநிலை பொறியாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள் நிவாரண பணி மேற்கொள்வதற்காக 150 தூய்மை பணியாளர்கள், 5 சுகாதார ஆய்வாளர்கள், 10 தூய்மைப்பணி மேற்பார்வையாளர்கள், மழை நீர் உறிஞ்சுவதற்கான 10 எச்.பி மோட்டார்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் மாநகராட்சி நகரப் பொறியாளர் சிவபாதம், மண்டலத் தலைவர் விஜயலட்சுமி கண்ணன் மற்றும் துணை ஆணையர், மண்டல உதவி ஆணையர்கள், உதவி செயற் பொறியாளர்கள், மாநகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்