- Advertisement -

திருச்சி எம்.ஐ.இ.டி பொறியியல் கல்லூரியின் 23-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா – ஸ்ரீலங்கா எம்.பி பங்கேற்பு!

- Advertisement -

திருச்சி குண்டூர் பகுதியில் அமைந்துள்ள எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரியின் 23-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு எம்.ஐ.இ.டி. கல்வி நிறுவனங்களின் தலைவர் அல்ஹாஜ் Er. A. முகமது யூனுஸ் தலைமை வகித்து தலைமை உரையாற்றினார். எம்.ஐ.இ.டி கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் முனைவர் M.Y. அப்துல் ஜலீல் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அதில், மாணவர்களுக்கு தன்னுடைய இதயம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டு வெற்றி என்பது இயங்கும் படிக்கட்டில் கிடைப்பதல்ல அதற்கு ஏணிப்படிகள் ஏற வேண்டும் என்றார்.

Bismi

முன்னதாக பட்டமளிப்பு விழாவிற்கு வருகைதந்த மாணவர்கள், பெற்றோர்கள் சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் A. நவீன் சேட் வரவேற்று கல்லூரி கடந்து வந்த பாதை, அதன் வளர்ச்சி மற்றும் சாதனைகளை தன்னுடைய பட்டமளிப்பு விழா அறிக்கையில் எடுத்துக் கூறினார்.

Vagai

இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அல்ஹாஜ் அப்துல் ரவூப் ஹக்கீம் MP, கலந்துகொண்டு சிறப்புரையாற்றி, 209 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி மாணவர்களிடையே பட்டமளிப்புவிழா உரையாற்றினார். அவரது உரையில் பட்டமளிப்பு விழா என்பது முடிவல்ல, மாணவர்களாகிய உங்களுடைய வளர்ச்சியின் ஆரம்பம். கல்வி என்ற நிலப்பரப்பில் உயர்கல்வி என்பது ஒரு மரபு. அதனுள் பல மாணவர்கள் பூத்துக் குலுங்கி கொண்டிருக்கிறார்கள். கல்லூரிதான் ஒரு மாணவனின் ஒழுக்கத்தை செதுக்குகிறது. இன்றைய உலகம் போட்டி நிறைந்த உலகமாக உள்ளது. இந்த போட்டி நிறைந்த உலகில் மாணவர்கள் கற்றுக் கொள்வது என்பது வாழ்நாள் முழுவதும் வருவது. மேலும் மாணவர்கள் சாதிக்க தங்களுடைய அறிவை தினமும் வளர்த்துக் கொள்ள வேண்டும், மற்றும் மாணவர்கள் அதிக கல்வி தகுதிகளை தேடிச் செல்ல வேண்டும் என்றார். மேலும் நாட்டை வளப்படுத்த மாணவர்கள் தங்களின் கல்வி தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

மேலும் இந்த வருடத்திற்கான நீதிபதி M. பக்கீர் முகமது சுழல் கோப்பையானது பல்கலைக்கழக தேர்வில் முதலிடம் பிடித்த மேலாண்மைத்துறைக்கு வழங்கப்பட்டது. முன்னதாக  கட்டிடவியல் துறை உதவிப் பேராசிரியர் சந்தோஷ்குமார் சிறப்புவிருந்தினரை அறிமுகப்படுத்தினார் .நிறைவாக மேலாண்மைத்துறை துறைத்தலைவர் முனைவர் ஆண்டனி பிரகாஷ் நன்றி உரையாற்றினார். இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழாவின் ஒருங்கிணைப்பாளரான அறிவியல் மற்றும் மனிதநேயத் துறையின் துறைத்தலைவர்  மணிகண்டன் செய்திருந்தார்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்