திருநெல்வேலியில், அண்ணல் மகாத்மா காந்தியடிகளின் 157-வது பிறந்தநாள்!
திருநெல்வேலியில், அண்ணல் மகாத்மா காந்தியடிகளின் 157-வது பிறந்தநாள்!

பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை வளாகத்தில், கூட்டாக தூய்மைப்பணிகளை மேற்கொண்ட, மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள்!

திருநெல்வேலி, அக்டோபர். 2:- “அண்ணல்” மகாத்மா காந்தியடிகளின், 157-வது பிறந்த நாளை முன்னட்டு, திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான

டாக்டர் மோனிகா ராணா உத்தரவின்பேரில், இன்று ( அக்டோபர். 2) மேலப்பாளையம் மண்டலம், பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை காவலர்கள் குடியிருப்புப் பகுதியில், மாநகர் நல அலுவலர் (CITY HEALTH OFFICER) பொறுப்பு வகிக்கும் டாக்டர்.ராணி தலைமையில், மத்திய சிறைச்சாலை கண்காணிப்பாளர் செந்தாமரை கண்ணன் முன்னிலையில், மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் 100 பேர் சிறைக்காவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் 50 பேர் என, மொத்தம் 150பேர், 3 மினி ஜேசிபி, தளவாடப்பொருட்கள் ஆகியவற்றின் உதவியுடன், “கூட்டு” துப்புரவு பணிகளை (MASS CLEANING CAMPAIGN) மேற்கொண்டனர். “தூய்மையே சேவை!” என்னும் மகாத்மா காந்தியடிகளின் அமுத வாக்கிற்கிணங்க நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் போது, மேலப்பாளையம் மண்டல
சுகாதார அலுவலர் சாகுல் அமீது, சுகாதார ஆய்வாளர்கள் நடராஜன்,முருகன், கார்த்திக் மணி, பாரதிராஜா, செல்வி.வித்யா பிரியதர்ஷினி, மகாராஜா, சஞ்சீவ், சிந்து செல்வி,பிரசாந்த், தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியராஜ், மற்றும் பரப்புரையாளர்கள், தூய்மைப்பணி மேற்பார்வையாளர்கள் ஆகியோரும், உடனிருந்தனர். முன்னதாக, “தூய்மையைப் பேணுவோம்!”- என, அனைவரும் “உறுதிமொழி” எடுத்துக் கொண்டனர்.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்





Comments are closed.