ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சித்திரை தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

0

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு கிழக்கு சித்திரை வீதியில் உள்ள சித்திரை தேரில் முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. அது சமயம் கோவில் அர்ச்சகர்கள் வேதங்கள் சொல்ல முகூர்த்த காலில் புனிதநீர் தெளித்து, சந்தனம் பூசி, முகூர்த்த காலில் நுனியில் மாவிலை, பூ மாலை உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. திருச்சி திருவரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரைத் தேர்த்திருவிழா கொடியேற்றத்தையொட்டி இன்று நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு கொடிமரம் மண்டபம் வந்தார். பின்னர் மீன லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து காலை 6 மணிக்கு நம்பெருமாள் கொடி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு கண்ணாடி அறையை சென்றடைந்தார். பின்னர் மாலை 6.30 மணிக்கு உபய நாச்சியார்களுடன் புறப்பட்டு சித்திரை வீதிகள் உலாவந்து இரவு 8.30 மணிக்கு சந்தனு மண்டபம் வந்தடைவார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு யாகசாலை சென்றடைவார். அங்கு நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நாளை (22-ந் தேதி) அதிகாலை 2 மணிக்கு கண்ணடி அறையை சென்றடைவார். விழாவின் இரண்டாம் நாளான நாளை மாலை கற்பகவிருஷ வாகனத்திலும், 23ந் தேதி காலை சிம்ம வாகனத்திலும். மாலை யாளி வாகனத்திலும், 24ந் தேதி காலை இரட்டை பிரபை வாகனத்திலும், மாலை கருட வாகனத்திலும், 25ந் தேதி காலை சேஷ வாகனத்திலும், மாலை அனுமந்த வாகத்திலும், 26ந் தேதி காலை தங்க ஹம்ச வாகைத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலாவருகிறார். 27ந் தேதி நெல்லளவு கண்டருளுகிறார். 28ந் தேதி காலை வெள்ளி குதிரை வாகனத்திலும், மாலை தங்க குதிரை வாகனத்திலும் வீதி உலா வருகிறார்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வரும் 29ந் தேதி நடைபெறுகிறது. 30 ந் தேதி சப்தாவரணம், 1ந் தேதி ஆளும் பல்லக்குடன் விழா நிறைவடைகிறது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் கந்தசாமி, ஒரு துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், கோவில் ஊழியர்கள் செய்தனர்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்