அமெரிக்கவின் வெள்ளை மாளிகையின் புதிய செய்திச் செயலாளராக கரீன் ஜீன்-பியர் நியமிக்கப்பட்டுள்ளார்.
செய்தி செயலாளர் உயர் பதவியை வகிக்கும் முதல் கறுப்பின நபர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.அத்துடன் இந்த பதவியை பெரும் முதல் எல்ஜிபிடிகியூ நபராகவும் கரீன் ஜீன்-பியர் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பணியில் இருந்த ஜென் சாகிக்கு பதிலாக மே 13 ஆம் தேதி முதல் கரீன் ஜீன்-பியர் பொறுப்பேற்று கொள்ளவுள்ளார்.இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரீன் ஜீன்-பியர்-யின் அனுபவம், திறமை மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பாராட்டுவதாகவும், அவருடைய பணி நியமனத்தை அறிவிப்பதில் பெருமை கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.