நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022 வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு மற்றும் நகரமைப்பு குழு தலைவர் மறைமுகம் தேர்தல் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
தேர்தலில் வரி விதிப்பு மற்றும் நிதிக் குழு தலைவராக மாமன்ற உறுப்பினர் முத்துச்செல்வம் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நகரமைப்பு குழு தலைவராக மாமன்ற உறுப்பினர் எம் தர்மராஜன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிகழ்வில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் மாநகராட்சி துணை மேயர் திவ்யா திருச்சி மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினர்.