திருச்சியில் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி பிரச்சார வாகனம் மாநகராட்சி மேயர் அன்பழகன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நமது நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 15 லட்சம் நோயாளிகள் புற்று நோயால் கண்டறியப்படுகின்றனர் இதில் 8 லட்சம் பேர் புற்று நோய் பாதிக்கப்பட்டு மரணம் அடைகின்றனர்
உலக சுகாதார அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் மே 31 ஆம் தேதியை உலக புகையிலை எதிர்ப்பு தினமாக கடைபிடித்து வருகிறது
இதன் மூலம் உலக மக்களிடையே புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது . இதை பின்பற்றும் வகையில் ஹர்ஷமித்ரா மருத்துவமனை மற்றும் ரோஸ் கார்டன் அறக்கட்டளை இணைந்து கடந்த 12 வருடங்களாக தொடர்ந்து புகையிலை பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது .
இந்த ஆண்டும் புகையிலையினால் ஏற்படும் தீமைகள் மற்றும் அதனால் ஏற்படும் பூமி . மாசுபடுதல் பற்றிய விழிப்புணர்வை ‘ இயற்கையை காப்போம் ” என்ற கருப்பொருளை மையமாக வைத்து திருச்சி நாகமங்கலத்தில் உள்ள மருத்துவமனையில் இதற்காக இன்றைய இளைய சமுதாயத்தினரை கொண்டு மாபெரும் விழிப்புணர்வு வாகன ஊர்தி பிரச்சாரம் நடத்தப்பட்டது
இதனை திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் கொடியசைத்து துவக்கி வைத்தார்,இதன்மூலம் புகையிலையினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு , அதன் தாக்கம் குறித்த விழிப்புணர்வை பதாகைகள் ஏந்தியும் விழிப்புணர்வு நாடகங்கள் நடனங்கள் மற்றும் முழக்கங்கள் மூலம் பொதுமக்களை எளிதாக சென்றடையும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது
மேலும் இதுகுறித்து மருத்துவமனை மருத்துவர் பேட்டியாக கூறுகையில்..
கொரோனா காலத்திற்குப் பிறகு இந்த புற்றுநோய் குறித்த வாகனம் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது
புற்றுநோயைப் பொருத்தவரை நமது நாட்டில் மக்களிடம் விழிப்புணர்வு குறைவாக உள்ளது என மருத்துவர்என்ற முறையில் நாங்கள் பார்க்கமுடிகின்றது..
புற்றுநோய் என்பது முதல் நிலையில் வந்தால் குணம் அடைந்து விடலாம்
ஆனால் போதிய விழிப்புணர்வு இல்லாதது மற்றும் தேவையில்லாத பயம் காரணமாக முற்றிய நிலையிலேயே நோயாளிகள் வருகின்றனர்.
இதுபோன்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டால் மட்டுமே புற்றுநோயிலிருந்து பொது மக்களை காப்பாற்ற முடியும்
புகையிலை பயன்படுத்துவதால் தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் அதிகமாக புற்றுநோய் பாதிக்கப்பட்டு
நமது நாட்டில் ஆண்டுக்கு 7 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்
இதேபோன்று புகைப்பிடிப்பதால் நுரையீரல் பாதிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் 40,000 ஆயிரம் பேர் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்
இதிலும் 36000 பேர் புகையிலையால் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.
நமது நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 15 லட்சம் நோயாளிகள் புற்று நோயால் கண்டறியப்படுகின்றனர் இதில் 8 லட்சம் பேர் புற்று நோய் பாதிக்கப்பட்டு மரணம் அடைகின்றனர் மேலும் வளர்ந்த நாடுகளில் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது இதற்கு காரணம் அங்கு விழிப்புணர்வு அதிகமாக செய்யப்படுகிறது ஆனால் நமது நாட்டில் விழிப்புணர்வு குறைவான காரணத்தினால் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது என தெரிவித்தார்..