நாட்டில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது,வெற்று பேச்சுக்களை பேசி மாய பிம்பத்தை உருவாக்கி வருகிறார் பிரதமர் மோடி – ராகுல் காந்தி
டெல்லி, மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் இரு பிரிவினரிடையே மோதல்கள் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. வன்முறை நடந்த இடங்களில் புல்டோசர்கள் மூலம் வீடுகள், கடைகளை இடிக்கும் பணி நடைபெற்றது. இதற்கு ஒரு தரப்பினரின் வீடுகள் குறிவைத்து இடிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
7டெல்லி, மத்திய பிரதேசத்தில் வன்முறை நடந்த இடங்களில் புல்டோசர்கள் மூலம் வீடுகள் இடிக்கப்படுகின்றன. நாட்டில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக பெரிய அளவில் வெற்று பேச்சுக்களை பேசி மாய பிம்பத்தை உருவாக்கி வருகிறார் பிரதமர் மோடி. ஆனால் நாட்டில் 8 நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி இருப்பு உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பண வீக்கம் அதிகரித்து வருகிறது. நிலக்கரி பற்றாக்குறையால் மி்ன்வெட்டு ஏற்பட்டால் சிறுதொழில்களை அழித்துவிடும். இதனால், அதிக அளவில் வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கும். இதைபற்றி பிரதமர் மோடி கவலைப்படவில்லை. புல்டோசர் வெறுப்புணர்வை பிரதமர் மோடி நிறுத்திவிட்டு அனல் மின் நிலையங்கள் செயல்படுவதில் கவனம் செலுத்த வேண்டும். என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.