நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜின்டாலை உபா (UAPA) சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக திருச்சி பாலக்கரை பகுதியில் ஆர்பாட்டம் நடைபெற்றது
ஆங்கில தொலைக்காட்சி விவாதத்தில் நபிகள் நாயகம் குறித்து அவதூறு பரப்புரை செய்த பாஜகவின் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவையும் இதைபோன்று தன்னுடைய டிவிட்டர்
பதிவில் நபிகளாரை குறித்து அவதூறு பரப்புரை செய்த பாஜக டெல்லி ஊடக பிரிவைச் சேர்ந்த நவீன் ஜின்டாலையும் மக்களைப் பிளவுபடுத்தி,
வன்முறையைத் தூண்டக்கூடிய வகையில் பரப்புரை செய்ததற்காகப் உபா (UAPA) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து உடனடியாகக் கைது செய்வதற்கு ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் திருச்சியில் பாலக்கரை ரவுண்டானா அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் முகமது ராஜா தலைமையில் நடைபெற்றது.
இதில் மமக பொதுச் செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் சமது மற்றும் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் துரை.தமிழரசு ஆகியோர் இப்போராட்டத்தில் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினர்.
இப்போராட்டத்தில் தமுமுக மாவட்ட செயலாளர் A. இப்ராஹிம், மமக மாவட்ட செயலாளர் A. பைஸ் அகமது MC, மற்றும் மாவட்ட பொருளாளர் A. அஷ்ரப் அலி மற்றும் தமுமுக
நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்