தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு சார்பில் மனிதச்சங்கிலி போரட்டம் நடைபெற்றது,
சமிபத்தில் தனியார் தொலைகாட்சி விவாதத்தில் பங்கேற்ற பாஜகவின் தேசிய செய்தி தொடர்ப்பாளர் நுகர் சர்மா, நபிகள் நாயகத்தை பற்றி தவறான கருத்து தெரிவித்துள்ளார் அதை தொடர்ந்து
பாஜகவின் டெல்லி ஊடக பிரிவின் நிர்வாகி நவீன் ஜிண்டாலும் இணையதளத்தில் தவறான கருத்தை தெரிவித்துள்ளனர்,நபிகள் நாயகம் பற்றிய தவறான கருத்துக்களை தெரிவித்து இணையதளத்தில் வெளியிட்ட தாலும் இஸ்லாமியர்கள் மத்தில் பெரும் அதிருப்தியை இக்கருத்து ஏற்படுத்தி உள்ளது, இதை கண்டித்து இஸ்லாமிய நாடுகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம்தெரிவித்துவரும்
நிலையில் திருச்சி நத்தர்ஷா தர்ஹா அருகே தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு சார்பில் மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்றது, இந்த மனிதசங்கிலி போராட்டத்திற்க்கு மாவட்ட நிர்வாகிகள்
எ.ஷம்சுதீன் தலைமை வகித்தார்,
நிஷரூதீன், டி.ஜி.எம்.ரபிஅகமது,
ஆகியோர் முன்னிலை வகித்தனர்
போராட்டத்தின் துவக்க உரையை ஆர்ஒய்.ஷாகிர், நிகழ்தினார்
மாநில துணைத்தலைவர் ஆல்ஃபநஜீர்,கண்டன உரை நிகழ்தினார்,
இதில் மாவட்ட நிர்வாகிகள் சித்திக், பீமநகர் இல்மாயில், ஷகித், அஸர், காதர், ஆர்.மைதீன், மற்றும் நகர கிளை நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்