திருச்சி அண்ணா சிலை அருகில் திருச்சி தெற்கு மாவட்ட விவசாய அணி சார்பாக முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 99 வது பிறந்த நாள் விழா மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓராண்டு கால சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர்
கே.சி.பழனிச்சாமி தலைமையில்.
மலைக்கோட்டை பகுதி செயலாளரும், திருச்சி மாநகராட்சி மூன்றாவது மண்டல் தலைவருமான மதிவாணன் முன்னிலையில், சிறப்பு விருந்தினராக
சிறப்பு பேச்சாளர் வி.பி.ராஜன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார்,
12 வது வட்ட செயலாளர் சிவகுமார்,
12வது மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் பன்னீர்செல்வம்,12 வது வட்ட மாமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் சிறப்பு பேச்சாளர்கள் விபி ராஜன் பாலக்கரை கோவிந்தன் மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் சங்கர் லோகநாதன் மதியழகன் பாண்டியன் தங்கராஜ் ராதாகிருஷ்ணன் துரைசாமி வினோத் உள்பட பலர் கலந்து கொண்டனர். பகுதி அமைப்பாளர் விவசாய அணி மலைக்கோட்டை பகுதி பரமசிவம் நன்றியுரையாற்றினார்.