திருச்சி எடமலைப்பட்டி கலைமகள் தொடக்கப்பள்ளியில் திருச்சி ஜே.கே.சி அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணமாக பேஸ்ட், பிரஸ் மற்றும் சுகாதார உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இந்த விழாவிற்கு தலைமை ஆசிரியர் தனலட்சுமி தலைமை தாங்கினார். உதவி ஆசிரியை திருமதி சாந்தி வரவேற்புரையாற்றினார். இறுதியாக ஆரோக்கியமேரி, சிறிய புஷ்பம் ஆசிரியை நன்றி கூறினார்.
ஜே.கே.சி. அறக்கட்டளை நிறுவனரும் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவருமாகிய முனைவர் ஜான் ராஜ்குமார் இந்த விழாவில் கலந்து கொண்டார். உடன் ஆயர் டேவிட் பரமனந்தம் ஆகியோர் உள்ளனர்.