திருச்சி & புதுக்கோட்டை சாலையில் குண்டூர் பெரிய ஏரி உள்ளது.
ஏரியின் பரப்பளவு சுமார் 367 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. திருச்சி கிழக்கு பகுதியில் உள்ள விவசாயத்திற்கு இந்த குண்டூர் பெரிய ஏரி நீர்நிலைகள் தான் ஆதாரமாக உள்ளது.
மிகவும் வறட்சியான காலங்களில் இந்த ஏரியில் தண்ணீர் தான் திருச்சி விவசாய மக்களுக்கு மகசூலை தரும். ஜீவநதியாக வாழ்வாதாரத்தை வழங்கி வருகிறது. கிபி 10ம் நூற்றாண்டில் குவாவன் பெருந்தட்டன் என்னும் முத்தரையர் சமூகத்தை சேர்ந்த குறுநில மன்னனால் குண்டூர் பெரிய ஏரி வெட்டப்பட்டுள்ளது.
ஆயிரம் வருடங்களுக்குப் பிறகும் குண்டூர் எனும் பெயரால் நிலைத்திருப்பது இதன் சிறப்பு அம்சமாகும். குவாவன் குறுநில மன்னனின் வம்சாவளியினர் குண்டூரில் வாழ்ந்து வருவது கூடுதல் சிறப்பாகும். இதன் கல்வெட்டு குண்டூர் பெரிய ஏரியின் குமிழி தூம்பில் உள்ளது.
இது வரலாற்று ஆதாரம் கொண்ட நீர் நிலை ஏரியாகும். தமிழகத்திலே மிகப்பெரிய ஏரியாக குண்டூர் பெரிய ஏரி திகழ்கிறது.
அறிய பல ஆதார உண்மைகள் கொண்ட தொன்மையான ஏரி குண்டூர் பெரிய ஏரி என்பது திருச்சிக்கு பெருமையும் விவசாய மக்களுக்கு பாரம்பரியமான பெரிய ஏரியாக திகழ்கிறது. இது சம்பந்தமான ஆதார தகவல்கள் குண்டூர் கிராம தலைவர் சி.பி. ரமேஷ் வழங்கியிருக்கிறார்.
திருச்சி மாவட்டத்தில் சில நேரங்களில் அடைமழை பெய்யும் என்று சொன்னால் அதிலே அதிகமாக கொள்ளளவு கொண்ட 367 ஏக்கரில் உள்ள இந்த குண்டூர் பெரிய ஏரியில் நிரம்பி வழியும்போது அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய பாசனம் ஏரியின் தண்ணீர் மக்களுக்கு விவசாய மக்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியும், விவசாயத்தில் அவர்களுக்கு மிகப்பெரிய வருவாயும், மிகப்பெரிய ஆதாரத்தையும், வாழ்வாதாரத்தையும் மீண்டும் மீண்டும் கொடுத்து வருகிறது.
குண்டூர் கிராமத்தில் அமைந்திருக்கின்ற குண்டூர் பெரிய ஏரி 367 ஏக்கர் பரப்பளவில் அநேக விவசாய மக்களுக்கு மிகப்பெரிய மகசூலையும் வாரி வழங்குகிறது என்பது மிகப்பெரிய ஒரு வரலாற்று உண்மை. இந்த வரலாற்று உண்மைகளை ஆராய்வதற்கு சுமார் ஓர் ஆண்டுகள் எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த ஓராண்டில் கிடைக்கப்பெற்ற தகவல் தான் இப்பொழுது இந்த குண்டூர் பெரிய ஏரியின் வரலாறு என்று ஜான் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.