அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் தேசிய மாணவர் அமைப்பு நாடு முழுவதும் பல்வேறு விதமான ஆக்கப்பூர்வமான பணிகளை செய்து வருகிறது.
ஆண்டிற்கு 2 முறை நடைபெறும் ABVP யின் தேசிய செயற்குழு கூட்டம் இந்தாண்டு கடந்த மே 27 முதல் 29 வரை ஹிமாச்சல் பிரதேசத்தின் சிம்லாவில் நடைபெற்றது.
26 ஆம் தேதி மாலை நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் ஹிமாச்சல் பிரதேசத்தின் முதல்வர் திரு. ஜெய்ராம் தாக்கூர் அவர்கள் கலந்து கொண்டு பேசினார்.
27ஆம் தேதி துவங்கிய தேசிய செயற்குழு கூட்டத்தினை தேசிய தலைவர் பேரா. CN பட்டேல்(குஜராத்) அவர்கள் மற்றும் பொதுச் செயலாளர் செல்வி.நிதி திரிபாதி (டெல்லி) தேசிய அமைப்புச் செயலாளர் திரு.ஆஷிஷ் சவுகான் (மும்பை) ஆகியோர் வழிநடத்தினர்.
இந்த தேசிய செயற்குழு கூட்டத்தில் கடந்த ஒரு ஆண்டு முழுவதும் நாடு முழுவதும் நடைபெற்ற இயக்கப் பணிகள் குறித்து கல்வி சூழ்நிலைகள் குறித்து தேச பாதுகாப்பு குறித்து நீண்ட நெடிய விவாதங்கள் நடைபெற்றது மேலும் வரும் கல்வி ஆண்டிற்கான முழுமையான திட்டமிடலும் நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை
நாடு முழுவதும் உறுப்பினர் சேர்க்கையானது ஒரு கோடியை இலக்காக வைத்து நடத்தப்படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கல்லூரி கிளைகள் :
நாடு முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கல்லூரிகளில் கல்லூரி கிளைகள் அமைக்கப்படும் என்று திட்டமிடப்பட்டுள்ளது
.
சுதந்திரம் 75:
சுதந்திரப்போராட்டத்தில் 75வது ஆண்டை நினைவு கூறும் வகையில் நாடு முழுவதும் 2 லட்சம் கிராமங்களில் தேசிய கொடி ஏற்றி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
விருக்ஷ மித்திரன் :
விருக்ஷ மித்திரன் என்கின்ற பெயரில் இன்றைய காலகட்டத்தில் ஏற்படும் பருவநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுத்திட நாடு முழுவதும் ஒரு கோடி மரக்கன்றுகளை நட்டுவைத்து வளர்த்திட ABVP முடிவுசெய்துள்ளது அதற்கான முன்பதிவு ஜூன் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தில் இருந்து துவங்குகிறது.
மூன்று நாள்கள் நடைபெற்ற தேசிய செயற்குழு கூட்டத்தில் 4 வகையான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவை :
1.தேசிய கல்வி நிலைமை
2 தேசிய நிலைமை
3.தேசிய கல்வி கொள்கை செயல்படுத்துதல்
4.சுயசார்பு பொருளாதாரம்.
இவற்றில் தமிழகத்திற்கு தொடர்பான சில தீர்மானங்கள்.
கல்வி நிலைமை :
1.குஜராத், மே.வங்கம், தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் ஆளுநர்கள் மூலமே நடத்தப்பட வேண்டும் என்று தேசிய செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
2.ஆளும் திமுக அரசின் அரசியல் காரணங்களுக்காக தமிழக மாணவர்களின் வாழ்வை கேள்விக்குறியாக்கும் செயலை ABVP அனுமதிக்காது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
3.தேசிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்கின்ற தமிழக அரசின் நிலைப்பாட்டினை ABVP வன்மையாக கண்டிக்கிறது.
அண்டை நாடான இலங்கைக்கு போர் நெருக்கடி காலத்தில் தவித்தபோது இலங்கையில் உள்ள தமிழர்களின் நலன் கருதி இந்திய அரசு ரூ – 7,500 கோடி ரூபாய் மதிப்பிலான அத்தியாவசிய பொருள்களை வழங்கி வழங்கியதை ABVP தேசிய செயற்குழு வரவேற்கிறது.
சுயசார்பு பொருளாதாரம் குறித்து தமிழகத்தில் ஷோகோ குழுமத் தலைவர் ஶ்ரீதர் வேம்பு அவர்களின் உதாரணமான முயற்சிகளுக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேசிய செயற்குழு கூட்டத்தில் தமிழகத்திலிருந்து 10 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் ஒட்டுமொத்தமாக 400 நபர்கள் தேசிய அளவில் கலந்து கொண்டனர்.