திருச்சியில் மாடுகள் ஏற்றிவந்த லாரி, அரசு பேருந்தை இடித்துவிட்டு தப்பிக்க முயற்சி

0

கரூர் உப்பிடமங்கலம் பகுதியில் இருந்து 10க்கும் மேற்பட்ட மாடுகளை ஏற்றி கொண்டு திருவோணம் வரை செல்லும் லாரி, திருச்சி தேசிய நெடுஞ்சாலை, கல்லணைக்கு செல்லும் சர்வீஸ் சாலையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற அரசு பேருந்தின் பின்புறம் இடித்து விட்டு வேகமாக முந்திக் கொண்டு சென்றுள்ளார் பொள்ளாச்சியை சேர்ந்த கோபி லாரி டிரைவர்.

- Advertisement -

விபத்தில் பேருந்தில் பயணம் செய்த நபர்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை, பேருந்திருக்கு மட்டும் சேதமான நிலையில், அரசு பஸ் பேருந்து டிரைவர் பாஸ்கர் மற்றும் நடத்துனர் செல்வராஜ் உடனடியாக பஸ் டெப்போவிற்கும், காவல் துறையினருக்கும் தகவல் அளித்தனர்.


அந்த வழியாக செல்வதற்கு வழி இல்லாமல் அரசு பஸ்,லாரி நின்றதால் வாகன ஓட்டிகள் அரசு பஸ் டிரைவர் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது டிரைவர், நடத்துனர், அரசு பஸ்சில் பயணம் செய்த பயணிகள், ஏதாவது உயிர் சேதம் ஏற்பட்டு இருந்தால் என்ன செய்வது அதனால் காவல்துறை வந்த பிறகு லாரியை எடுக்க வேண்டுமெனவும் தெரிவித்தனர். இதனால் வாக்குவாதம் முற்றிய நிலையில், சில நபர்கள் லாரி டிரைவரை எடுத்துச் செல்லும்படி அறிவுரை கூறியுள்ளனர், அறிவுரையை ஏற்று லாரி டிரைவர் எடுத்து செல்ல முயன்றுள்ளார். அப்போது லாரி பின் சென்ற அரசு பஸ் நடத்துனர், டிரைவர் லாரியை ஓரமாக நிறுத்த சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்