தமிழக வணிகர் விடியல் மாநாட்டில் லட்சக்கணக்கான வணிகர்கள் திரண்டனர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

0

லட்சக்கணக்கான
வணிகர்கள் திரண்டனர்திருச்சி மாவட்டம் சமயபுரம் டோல்கேட் அருகில் தமிழக வணிகர் விடியல் மாநாடு இன்று நடந்தது.இதில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்துகொண்டனர். மாநாட்டில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

தமிழகத்தில் ஆண்டுதோறும் மே 5ந்தேதி வணிகர் தினமாக கொண்டாடப்படுகிறது. வணிகர் தினமான இன்று வணிகர்கள் தங்களது கடைகளையும், நிறுவனங்களையும் மூடி, கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் 39-ஆவது வணிகர் தின மாநில மாநாடு திருச்சி சமயபுரத்தில் இன்று (5-ந்தேதி) நடைபெற்றது.
வணிகர் விடியல் மாநாடு
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின பேரமைப்பு சார்பில் 39 -வது வணிகர் தினத்தை முன்னிட்டு தமிழக வணிகர் விடியல் மாநாடு திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகில் பிரமாண்ட மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை 9மணிக்கு பேரமைப்பு கொடியேற்றுதலுடன் தொடங்கியது. இந்த மாநாடு மாலை வரை நடைபெற உள்ளது.
காலை 9.05 மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சி, 9.30 மணிக்கு மக்கள் இசை நிகழ்ச்சி, 10 மணிக்கு குத்து விளக்கேற்றி விழா நடந்தது.. காலை 10.15 மணிக்கு மாநாட்டு தலைமை உரையை மாநிலத் தலைவர் விக்கிரமராஜா வழங்கினார், 10.30 மணிக்கு மாநாட்டு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

- Advertisement -


மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
மாநாட்டுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமை வகித்தார்.. மாநில பொது செயலாளர் கோவிந்தராஜூலு வரவேற்றுப் பேசினார்.. பொருளாளர் சதக்கத்துல்லா மாநாடு தீர்மானங்களை வாசித்தார்.. அகில இந்திய வணிகர்கள் சம்மேளன (சி.ஏ.ஐ.டி.) தேசியத்தலைவர் பி.சி.பார்டியா, தேசிய பொதுச்செயலாளர் பிரவீண் கண்டேல்வால் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினர்.
அதைத்தொடர்ந்து வணிகர் விடியல்மாநாட்டில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, முதுபெரும் வணிகர்களுக்கு வ.உ.சி.வணிகச்செம்மல் விருதுகள் வழங்கி, நலிந்த வணிகர்களின் வாரிசுகளுக்கு க.மோகன் நினைவக கல்வி ஊக்கத்தொகை வழங்கி சிறப்புரையாற்றினார். அமைச்சர்கள் கே.என்.நேரு,அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
நிர்வாகிகள் கவுரவிப்பு
மதிய உணவு இடைவேளைக்கு பின் கலை நிகழ்ச்சி நடந்தது, தொடர்ந்து மாலையில் மாவட்டதலைவர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் வாழ்த்துரை வழங்கினர், தொடர்ந்து 38 – வது வணகர்தின மாநில மாநாட்டை சென்னையில் சிறப்பாக நடத்திய நிர்வாகிகள் கவுரவிக்கப்பட்டனர்.


மாநாட்டில் எம்.பி. எம்.எல்.ஏ.க்கள், உள்ளா ட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பல்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் வணிகர் சங்க நிர்வாகிகள், பேரமைப்பின், மாநில, மண்டல, மாவட்ட, நகர, கிராம வணிகர் சங்க நிர்வாகிகள் எனதமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான வணிகர்கள் கலந்து கொண்டனர்..இந்த மாநாட்டால் திருச்சி மாவட்டமே இன்று விழாக்கோலம் பூண்டது.
இந்த மாநாட்டில் மண்டல தலைவர் தமிழ்செல்வம், மாவட்ட தலைவர் ஸ்ரீதர், மாநிலதுணைத்தலைவரும், திருச்சி மாவட்ட நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பு தலைவருமான எஸ்.கந்தன், மாநில துணைத்தலைவர் கே.எம்.ஸ்.ஹக்கீம், மாநில இணைச்செயலாளர் ராஜாங்கம், நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் அன்பழகன், இளைஞரணி மாவட்ட செயலாளர் கே.எம்.எஸ்.மொய்தீன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட தலைவர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்