தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பாக திருச்சி துவாக்குடி அருகே உள்ள மண்டல அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் கண்ணன் மாநில செயலாளர் முருகானந்தம் மாவட்ட தலைவர் பிச்சைமுத்து ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்,
தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பு ஊதியத்தில் பணிபுரிபவர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், டாஸ்மாக் பணியாளர்கள் முன்னுரிமை வழங்க வேண்டும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்,
https://youtube.com/shorts/gqo09_HtfBI?feature=share
டாஸ்மாக் நஷ்டம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.