ஜே.கே.சி அறக்கட்டளை
20ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு நிறுவனத் தலைவர் முனைவர் பா ஜன் ராஜ்குமார் தலைமை தாங்கினார், தலைமையாசிரியர் ஜான் பிரிட்டோ, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உணவுகள் மற்றும் இனிப்புகளை வழங்கினார்.
இந்த நிகழ்வில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் அறக்கட்டளையின் இருபதாவது ஆண்டு விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு உணவு மற்றும் இனிப்புகள் வழங்கி அவர்களை கவுரவித்தனர், நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் அனைவருக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது, அதேபோல ஆண்டுதோறும் காமராஜர் பிறந்த நாள் அன்று கல்வி உதவி வழங்கும் திட்டம், அன்னை தெரசா மகளிர் நல திட்டம், அதுபோல் ஆண்டுதோறும் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா மத நல்லிணக்கம் ஏற்படுத்துதல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது,
அதைப் போல இயற்கை மருத்துவம், மூலிகை மருத்துவம், கருத்தரங்கு மற்றும் உணவு வழங்குதல் சேவைகள் ஆற்றி வருகிறது இந்த நிறுவனமானது பொது மக்களுடைய நலனுக்காக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்பது சிறப்புக்குரியதாகும்.