சென்னையில் பெண் போதகர் கொலை செய்யப்பட்டதற்கு பேராயர் ஜான் ராஜ்குமார் கண்டனம்

0

சென்னையில் பெண் போதகர் கொலை செய்யப்பட்டதற்கு பேராயர் ஜான் ராஜ்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், சென்னை தாம்பரம் அருகே கிறிஸ்தவ பெண் போதகர் கடத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
காட்டுப்பகுதியில் எலும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் கண்டிக்கத்தக்கது. சென்னை தாம்பரம் அருகே அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் எஸ்தர் (வயது 55) என்பவர் கிறிஸ்தவ போதகர்.
கடந்த 8ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மாயமாகி இருந்த நிலையில். அவரது மகளை அழைத்து எலும்புக் கூடையும், ஆற்றின் அருகே கிடந்த பொருட்களை காண்பித்து போலீசார் விசாரித்தனர். அப்போது பையில் இருந்த வீட்டின் சாவியை வைத்து இறந்து கிடந்தது தனது தாய் எஸ்தர் என்பதை அவர் அடையாளம் காட்டினார். இவர் கிறிஸ்தவ போதகராக இருந்துள்ளார். கடந்த 8ஆம் தேதி வெளியே சென்றவர் எப்படி அடர்ந்த காட்டுப்பகுதியில் வந்தார் என்பது மர்மமாக உள்ளது.
மர்ம நபர்கள் அவரை கடத்தி வந்து கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். மீட்கப்பட்ட எலும்புக் கூட்டை பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது காவல்துறையின் சார்பிலும் பத்திரிக்கையில் வெளிவந்த செய்தியாக இன்றைக்கு மாலை செய்தியாக வெளி வந்திருக்கிறது. கிட்டத்தட்ட 8ம் தேதி தொலைந்தவர் 12 நாட்கள் என்ன ஆனார் என்று தெரியவில்லை. ஆனால் தாம்பரம் அடுத்து மதுரபாக்கம் கிராமத்தில் அடர்ந்த காட்டுப்பகுதியில் கிடந்த எலும்புக்கூட்டை அங்கே ஆடு மேய்க்க சென்ற ஒருவர் அதை காவல்துறைக்கு சொல்லி எலும்புக்கூடு கண்டு அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.
எனவே காவல்துறையும் தமிழக முதலமைச்சரும் நல்ல முறையில் நீதி விசாரணை நடத்தி கிறிஸ்தவ போதகர் குடும்பத்திற்கு உரிய நிவாரணத்தையும், உரிய பாதுகாப்பையும் வழங்க வேண்டும்.
இந்த கொலையை வன்மையாக கண்டிப்பதுடன் கொலையாளிகள் சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்து இந்திய தண்டனை சட்டப்படி தண்டிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்