கொரோனா தோற்று பரவல் காரணமாக சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் உள்ள ஹாங்ஷு நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டி செப்டம்பர் 10 முதல் 25ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த நிலையில், அங்கு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஆசிய விளையாட்டுப் போட்டி ஒத்திவைக்கப்படுவதாக சீன ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் இந்த முடிவை எடுத்துள்ளதாகச் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், ஒத்திவைப்புக்கான எந்த காரணத்தையும் தெரிவிக்கவில்லை. எனவே இதுகுறித்த அதிகார அறிவிப்பை ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.