உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62. 58 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,258,716 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 512,723,714 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 466,596,108 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 41,358 பேர் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 54 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதில், இன்று புதிதாக 54 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 35 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் மொத்த பாதிப்பு 34,53,883-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி புதிதாக உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. இதனால் மொத்த உயிரிழப்பு 38,025 ஆக உள்ளது. கொரோனாவிலிருந்து ஒரேநாளில் மேலும் 35 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 34,15,351-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 20,057 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது நிலவரப்படி 507 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.