கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும் என அரசாணை பிறப்பித்த, தமிழக முதலமைச்சருக்கு ஐசிஎப் பேராயம் சார்பில் பா. ஜான் ராஜ்குமார் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்

0

ஐசிஎப் பேராயம் பா. ஜான் ராஜ்குமார்

- Advertisement -

மேலும் இது குறித்து அவர் கூறுகையில்,
தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சிறுபான்மையினர் நலம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழ் நலத்துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு ஆணை வெளியிட்டதற்கு தமிழக அரசுக்கும், தமிழக முதலமைச்சருக்கும் ஐசிஎப் பேராயம் சார்பில் நெஞ்சார்ந்த உளமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

எங்களது ஐசிஎப் இண்டிபெண்டஸ் சர்சஸ் பெடரேஷன் சார்பில் சுமார் 10 ஆண்டுகளாக வைத்த இந்த கோரிக்கையை தமிழகத்தில் உள்ள திருச்சபைகள், ஆலயங்கள், தேவாலயங்களில் பணிபுரியும் கிறிஸ்தவ போதகர்கள், உபதேசியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மாதம்தோறும் ரூபாய் 2,000 வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினோம். அதை தற்போது நிறைவேற்றும் வண்ணமாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் மற்றும் மாநில சிறுபான்மையினர் நலம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழ் துறை அமைச்சருக்கும் எங்களது பேராயர்கள் பேரமைப்பு சார்பிலும் மிக்க நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள், சீசபிள்ளைகள், பாடகர்கள், கல்லறை பணியாளர்கள், கிறிஸ்துவ அனாதை இல்லங்கள் மற்றும் அபலை நிலையங்கள், மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு இல்லங்கள், தொழுநோயாளிகள் மறுவாழ்வு இல்லங்கள் போன்ற மையங்களில் பணிபுரிபவர்களுக்கு முறையான மாதாந்திர ஊதியம் என்று இல்லாமல் தேவாலயத்துக்கு வரும் அங்கத்தினரிடம் இருந்து பெறப்படும் நன்கொடை தொகையிலிருந்து மட்டுமே சிறு தொகை வழங்கப்பட்டு வருகின்ற நிலையில், கிறிஸ்தவ தேவாலயங்கள் பணியாற்றுபவர்கள் மற்றும் பணியாளர்கள் சமூக பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக நலவாரியம் உருவாக்கப்பட்டு, இவ் வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்ட உதவிகள் பெறுவதற்கு தகுதி உடையவர்களுக்கு சான்றிதழ் வழங்க அங்கிரிகப்பட்டிருக்கும் திருச்சபைகள் விவரம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதிலேயே ப்ராடஸ்டண்ட் திருச்சபைகள், சர்ச் ஆப் சவுத் இந்தியா சிஎஸ்ஐ, டி.இ.எல்.சி, ஆர்காட் லுத்ரன், இந்தியன் இவாஞ்சிலிக்கல் சர்ச், மெதடிஸ்ட் சர்ச், அட்வண்ட் சர்ச் போன்ற திருச்சபைகளும் மற்றும் பெண்சிகாஸ்ட் சர்ச் மாமன்றம் நியமிக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த குறிப்பில் இப்படி கொடுக்கப் பட்டிருக்கிற இந்த அனைத்து நலனும் ஏற்புடையதே. அதேநேரம் கிறிஸ்தவ சுயாதீன திருச்சபை என்பது என்னவென்றால் ஆர்.சி, சிஎஸ்ஐ, டி.இ.எல்.சி இவைகளைத் தவிர இருக்கக்கூடிய பிராட்டஸ்டண்ட் சபை அல்லாத அனைத்து சபைகளுக்கும் இண்டிபெண்டன்ஸ் சர்சஸ் சுயாதீன திருச்சபை கள் என்று அரசால் வரைமுறைப் படுத்தப்பட்டு சுமார் 20 ஆண்டுகளாக நாங்கள் எந்த கோரிக்கை வைத்தாலும் அதற்கு இண்டிபெண்டன்ட் சர்சஸ் சார்பில் கோரிக்கை என்று தான் அதற்கு பதில் அளிப்பார்கள். எனவே நாங்கள் ஒரு கூட்டமைப்பை உருவாக்கி கிறிஸ்தவர் சுயாதீன திருச்சபைகள் பேரவை என்ற அமைப்பை உருவாக்கி சுமார் 20 ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். அதற்கு ஒரு தலைமை பண்பாக ஜீசஸ் கிங் ஆஃ கிங்ஸ் ஆப் இந்தியா இந்த ஸ்தாபனம் நிறுவப்பட்டு இதன் கீழாக தமிழகம் முழுவதும் 2500 கிறிஸ்தவ போதகர்கள் அருட்பணியாளர்கள், ஊழியர்களுக்கு அங்கீகாரம் வழங்கி அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். இது அரசு பதிவு பெற்ற ஒரு அமைப்பாகும். அதன்கீழ் சுமார் 2 ஆயிரம் திருச்சபைகள் தமிழகத்தில் இருக்கிறது. அதே போல நமது அரசு வெளியிட்ட ஆணையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 500, 1000 ஆலய பணியாளர்கள், உபதேசியார்கள் இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். அப்படி என்றால் சுயாதீன திருச்சபை சார்ந்தவர்கள் சுமார் 3500ல் இருந்து 5,000 பேர் இருக்கிறார்கள் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. எனவே சான்றிதழ் அதாவது கிறிஸ்தவ தேவன் பணிபுரிபவர்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களுக்கு உரிய நபர்களை கண்டறிந்து சான்றிதழ் வழங்குவதற்கு பின்வரும் திருச்சபைகள் அங்கீகாரம் அதிகரிக்கலாம் என்று சிறுபான்மை நலத்துறை இயக்குனர் அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறார் அந்த வகையில் சான்றிதழ் வழங்க எங்களது ஜீசஸ் தே கிங் ஆப் கிங்ஸ் ஆப் இந்தியா பதிவு பெற்ற ஒரு அமைப்பு சுமார் 25 ஆண்டுகள் செயல்பட்டு வருகிறோம் அதனுடைய பேராயம் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பேராயர் தலைவர்கள் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். எனவே எங்களது பேராயத்தின் நிர்வாகிகளையும் அதாவது பேராயர் மற்றும் மாவட்ட தலைவர்கள் டிஸ்ட்ரிக்ட் பிரஸிடெண்ட்ஸ் சான்றிதழ் வழங்க அங்கீகாரத்தில் எங்களையும் இணைப்பு செய்யும்படி மிகப் பணிவன்புடன் முதலமைச்சர், சிறுபான்மை நலத்துறை ஆணையர் பீட்டர் அல்போன்ஸ், சிறுபான்மை நலத்துறை அமைச்சரையும், சிறுபான்மை நலத்துறை செயலரையும் மிகப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என்று பா.ஜான்ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்