இளைஞர்கள் காதல் மயக்கத்தில்
சிறைவாசியாக மாறிவிடக்கூடாது என சமூக ஆர்வலர் பா.ஜான் ராஜ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சியில் இது குறித்து அவர் கூறுகையில்,
வேலூர் திருவலம் பஸ் நிலையம் அருகில் சதீஷ்குமார் (20) வேலூர் ஆர்த்தோ டெக்னீசியன் படித்து வருகிறார். அதே தெருவை சேர்ந்த 18 வயது மாணவி கல்லூரியில் படித்து வருகிறார். ஒரே தெருவில் வசித்து வருவதால் இருவரும் ஒன்றாக பழகினர். இந்த நிலையில் காலை மாணவி கல்லூரிக்கு செல்வதற்காக திருவலம் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்து கொண்டு இருந்தார்.
அப்பொழுது சதீஷ்குமார் அங்கு வந்தார். திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டதால். இதில் ஆத்திரம் அடைந்த சதீஷ்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவி கழுத்தில் குத்தினார். அதில் படுகாயம் அடைந்த மாணவி ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார். இதனை கண்ட பஸ் நிலையத்தில் இருந்த சக மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மாணவியை மீட்டு முதல் உதவி அளித்தனர். வேலூர் மாணவர் சதீஷ்குமார் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அவரையும் மடக்கி பிடித்தனர்.
இது குறித்து தகவலறிந்த திருவலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவியை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கே மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மாணவர் சதீஷ்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரே பகுதியை சேர்ந்த வேலூர் மாவட்டம் திருவலம் அருகே இருக்கக்கூடிய ஒரே ஊரைச் சேர்ந்த,
20 வயது வாலிபர், 18 வயது மாணவி இருவரும் ஒரே பஸ்ஸில் வருவது போவதுமாக இருந்துள்ளனர.
ஆனால் இப்பொழுது இருவரும் கைகலப்பு ஏற்பட்டு கொலை முயற்சி அளவுக்கு போய்விட்டது என்றால் அதற்கு காரணம் உளவியல் ரீதியாக இன்றைக்கு நிறைய பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது. எனவே தமிழக அரசும் காவல்துறையும் இந்த மாணவ,மாணவி போன்ற பல பேர் பஸ் நிலையங்கள், பார்க்குகள் போன்ற இடத்திலே அவர்களை கண்காணித்து அவர்களுக்கு நல்ல ஆலோசனை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பாக இன்றைய இளைஞர்கள் செல்பேசியினால் காதல் மயக்கத்தில் அவர்கள் தன் நிலை அறியாது எதிர்காலம் குடும்பத்தை பற்றி அறியாமல் இப்படி தவறான போக்கினால் கொலை முயற்சி ஏற்படுகிற நிலையிலே சென்று இருக்கிறார்கள். எனவே இளைஞர்கள் தங்களை திருத்திக் கொள்ள வேண்டும்.
மாணவப் பருவத்தில் படிக்க வேண்டுமே தவிர காதல் என்ற மோகத்தில் விழுந்து ஜெயில் வாசியாக மாறிவிடாதீர்கள் எனக் கோரிக்கை விடுக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.