- Advertisement -

கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு கார்த்திக் வைத்தியசாலாவில் ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் டாக்டர் கே.எஸ். சுப்பையா பாண்டியன் வழங்கினார்.

0

- Advertisement -

தமிழகத்தில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் வருகிற 3ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு
திருச்சி தில்லைநகர் பகுதியில் அமைந்துள்ள கார்த்திக் வைத்தியசாலையில் இலவச சித்த மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர் டாக்டர் எஸ். தமிழரசி சுப்பையா, டாக்டர் கார்த்திக் முன்னிலை வகித்தனர்.
நலத்திட்ட உதவிகள்
இதில் அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் கே.எஸ். சுப்பையா பாண்டியன் கலந்துகொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவசமாக சித்த மருந்துகள் வழங்கினார்.
மேலும் ஏழை எளிய பெண்களுக்கு சேலை, உணவு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் கொடுத்தார்.

Bismi
Vagai


நிகழ்ச்சியில் தி.மு.க. நிர்வாகிகள் மருதுபாண்டி, கே.ஆர்.கே. ராஜா, சிந்தாமணி கார்த்தி,சதீஷ் குமார்,
சிங்கம் விஜய்,மகளிர் அணி தி.மு.க.
நிர்வாகிகள் மகாலட்சுமி மார்த்தாண்டம், சசிகலா,கலை ,தாமரை லட்சுமி, வாலாம்பாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் கே.எஸ். சுப்பையா பாண்டியன் தொடர்ந்து ஏழை எளிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இலவச சித்த மருத்துவ முகாம் அமைத்து நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்