திருச்சியில் சமூக ஆர்வலரும், சட்ட தன்னார்வலருமான முனைவர் பா.ஜான் ராஜ்குமார் கூறுகையில், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனம் மூலம் வாங்கப்படும் பைக் மற்றும் கார்களை மாற்று சாவி போட்டு எடுத்துச் செல்வதற்கு உரிமை இல்லை.
அது தண்டனைக்குரிய குற்றம்,
முதல் தகவல் அறிக்கை பதியலாம்,
நிதி நிறுவனங்களுக்கு அளிக்கப்படாத கடனை, வழக்கு தொடர்ந்து திரும்பப் பெறும் உரிமை மட்டும்தான் உள்ளது. காரை எடுத்துச் செல்லும் உரிமை கிடையாது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காலத்தில் இஎம்ஐ கட்டுவதை நிறுத்தி வைத்திருந்த வங்கிகள், நிதி நிறுவனங்கள் இன்றைய தினம் வாகனங்களை, குறிப்பாக கார்களை எடுத்துச் செல்வது மிகவும் தண்டனைக்குரிய குற்றமாகும். வாடிக்கையாளர்களின் புகாரின்பேரில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து எப்.ஐ.ஆர் பதிவு செய்ய முடியும். தமிழகத்தில் உள்ள நிதி நிறுவனங்கள் குறிப்பாக சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி போன்ற பெரு நகரங்களில் இந்த நிதி நிறுவனங்கள் நிறைய கார்களை பறிமுதல் செய்து தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். திருச்சியில் நிறைய கார்களை பறிமுதல் செய்துள்ளனர்.
இப்போது சமீபத்தில் மதுரை பைபாஸ் ரோட்டில் சுமார் 2 ஆயிரம் கார்கள், வேன்கள் நிறுத்தப்பட்டிருக்கிறது.
இவை தண்டனைக்குரிய குற்றம் என்று நீதித்துறை சொல்லுகிறது. எனவே இந்த பறிமுதல் செய்து ,மாற்று சாவி போட்டு எடுத்துச் சென்ற வாகனங்களை அந்த நிதி நிறுவனங்கள் நுகர்வோர், அந்த பயனாளிக்கு அந்த காரின் உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டும். இது தண்டனைக்குரிய குற்றமாகும்.
வடமாநிலங்களில் உள்ள நீதிமன்றங்களில் தீர்ப்பு கூறப்பட்டு ள்ளது. எனவே இதை முன்மாதிரியாக தமிழகத்தில் இருக்கக்கூடிய நிதி நிறுவனங்கள், வங்கிகள், வாகனங்கள், டூவீலர்கள், கார்கள் போன்றவற்றை பறிமுதல் செய்து மாற்று சாவி போட்டு எடுத்து செல்வதை தவிர்த்து உரிய நபர்களிடம் அந்த வாகனங்களை ஒப்படைக்க வேண்டும்.
வடமாநிலங்களில் ஹரியானா, பஞ்சாப், மேற்கு வங்கம் நீதிமன்றங்களில் தீர்ப்புகள் வழங்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது என்று கூறினார்.