உலக யோகா தினம் குறித்து விழிப்புணர்வு செய்தி முனைவர் ஜான் ராஜ்குமார் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அனைவருக்கும் இனிய யோகா தின நல்வாழ்த்துக்கள். நமது இந்திய மண்ணில் மகுடமாக விளங்கும் யோகா என்பது ஒரு கலை ஆகும். மனிதனின் மனதை ஒருநிலைப்படுத்தும்.
ஆழ்நிலை தியானம் ஆகும்.
கடந்த 2012ஆம் ஆண்டு ஜே.கே.சி அறக்கட்டளை சார்பில் யோகக்கலையை ஊக்கப்படுத்திய எனக்கு, சேவா ரத்னா விருதினை இந்திய இளைஞர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத் துறை மூலமாக பாராட்டும் விருதும் பெற்றது இன்னும் எனக்கு உத்வேகம் அளிக்கிறது. நமது இந்திய அரசு ஜூன் 21-ஆம் தேதியை உலக யோகா தினமாக அறிவித்து தொடர்ந்து நிகழ்ச்சிகள், விழாக்கள் நடைபெற்று வருகிறது.
25 ஆண்டுகளாக யோகா கலையை ஊக்கப்படுத்தி வருவதுடன் எங்கள் விழாக்களில் யோகா ஆசிரியர்கள் கொண்டு பயிற்சி அளித்து வருகிறோம். மனித உடலுக்கு இன்றியமையா பயிற்சி என்றால் அது யோகா. மருத்துவம் செய்வதை, யோகப்பயிற்சிகள் செய்து சாதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
யோகா, ஆசனங்கள், பத்மாசனம், சிரசாசனம் போன்ற ஆசனங்கள் மற்றும் முத்திரைகள் சிறப்பானது. ஆரோக்கியத்தையும், உடல் நிவாரணங்களையும் அளித்துள்ளது. நான் இன்றுவரை உடல் ஆரோக்கியத்துடனும் சுறுசுறுப்புடன் இயங்குவதற்கு யோகா பயிற்சி காரணமாக இருக்கிறது என்றார்.