உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் பைகளை உபயோகப்படுத்தக் கூடாது என்று பொது மக்களுக்கு இடையே விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்படுத்தினார் – சமூக ஆர்வலர் பா.ஜான் ராஜ்குமார்

0

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் பைகளை உபயோகப்படுத்தக் கூடாது என்று பொது மக்களுக்கு இடையே விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்படுத்தினார் –
சமூக ஆர்வலர் பா.ஜான் ராஜ்குமார்

இது குறித்து அவர் கூறுகையில்,உலக சுற்றுச்சூழல் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 5ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அதனை அரசும் ,பொது அமைப்புகளும், தன்னார்வலர்களும், சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் அதை கடைபிடித்து வருகிறோம்.

ஆனால் இந்த உலக சுற்றுச்சூழல் தினம் என்பது ஒரு சடங்காச்சாரமாக தான் ஆண்டுதோறும் ஜூன் 5-ஆம் தேதி நடைபெறுகிறது. அரசு எவ்வளவோ விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அது பாராட்டுக்குரியது. குறிப்பாக திருச்சி மாநகராட்சி மூலமாக பல்வேறு சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.

குறிப்பாக பிளாஸ்டிக் தவிர்த்து மஞ்சப்பை பயன்படுத்த வேண்டும் என்ற ஒரு விழிப்புணர்வு பொதுமக்களிடையே இன்னும் விரிவடைய வேண்டும். அதே போல அன்றாடம் ஒரு கடைக்குச் சென்றாலோ, ஒரு மார்க்கெட் சென்றாலோ, ஒரு ஜவுளிக்கடை சென்றாலும் அங்கு கொடுக்கக்கூடிய அந்த கேரிபேக் முழுவதும் பிளாஸ்டிக்காக இருப்பதனால் பொதுமக்கள் அதனையே தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள்.

- Advertisement -

பெரிய பெரிய ஜவுளி நிறுவனங்கள், அதேபோல மளிகை, சூப்பர் மார்க்கெட் போன்ற நிறுவனங்கள் எல்லாம் குறிப்பாக பொது மக்களுக்கு பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து வேறு விதத்திலேயே துணிப்பைகளை வழங்கினால் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாய் இருக்கும். ஒரு வீட்டில் இரவு டிபன் அல்லது காலையிலோ மதியமோ ஒரு சாப்பாடு கடையில வாங்கிட்டு வந்தால் அதில் சுமார் 10 பிளாஸ்டிக் பை இருக்கிறது.

100 கிராம், 50 கிராம், 200 கிராம், 500 கிராம் கொண்ட பிளாஸ்டிக் பைகள் எல்லாத்தையும் சாப்பிட்டுட்டு, திரும்பவும் கழிவுகள் எல்லாத்தையும் அதிலேயே போட்டு மொத்தமாக கொண்டு வந்து, பெரிய கேரி பேக் பிளாஸ்டிக் கேரி பேக்கில் அதை திரும்ப குப்பையிலையோ சாக்கடையிலையோ போட்டு விடுகின்றனர். அது மழைக்காலங்களில் அடைப்பு ஏற்பட்டு மழை வெள்ளம் ரோடுகளில் கரைபுரண்டு ஓடுகிறது.

நாம் எதற்கெடுத்தாலும் அரசையும், அரசு நிர்வாகத்தையும் குறை சொல்லுகிறவர்களாக மட்டும் இல்லாமல் நாமும் சமூக அக்கறை உள்ளவராக இருந்து இந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தில் நாம் ஒரு உறுதி மொழி ஏற்க வேண்டும். பிளாஸ்டிக் பைகளை உபயோகப் படுத்த மாட்டேன். பிளாஸ்டிக் பையில் கொடுக்கும் பொருட்களை வாங்க மாட்டேன். துணிப்பையில் வாங்குவேன் என்று உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு சமூக ஆர்வலர் முனைவர் ஜான் ராஜ் குமார் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்