அதிமுக பொதுக் குழு செல்லும் சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு

0

அதிமுக பொதுக் குழு செல்லும் திருச்சியில் இபிஎஸ் தரப்பினர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும், தனிநீதிபதி உத்தரவு ரத்த செய்யப்படுவதாக தீர்ப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு செல்லாது என்றும், கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தனி நீதிபதி தீர்ப்பளித்த போது, எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவாகக் கருதப்பட்ட நிலையில்,
அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிா்த்து எடப்பாடி கே.பழனிசாமி சாா்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது சென்னை உயா் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

- Advertisement -

அதிமுக பொதுக் குழு கூட்டத்தை எதிா்த்து ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், பொதுக் குழு உறுப்பினா் வைரமுத்து ஆகியோா் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், ‘சென்னையில் கடந்த ஜூலை 11-இல் நடைபெற்ற அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லாது. அதிமுகவில் கடந்த ஜூன் 23-ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும்’ என்று ஆகஸ்ட் 17-ஆம் தேதி தீா்ப்பளித்தாா்.
தனி நீதிபதியின் தீா்ப்பை எதிா்த்து உயா்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தா்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் எடப்பாடி பழனிசாமி சாா்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனிடையே, எடப்பாடி கே.பழனிசாமியின் மேல்முறையீட்டு வழக்கில் கேவியட் மனுவை ஓ.பன்னீா்செல்வம் தாக்கல் செய்தாா். அதில், ‘மேல்முறையீட்டு வழக்கில் தனது தரப்பு வாதத்தைக் கேட்ட பிறகே எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டும்’ என கோரியிருந்தாா்.
இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தா் மோகன் ஆகியோா் முன்பு ஆகஸ்ட் 25-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும், தனிநீதிபதி உத்தரவு ரத்த செய்யப்படுவதாக இன்று தீர்ப்பளித்துள்ளனர்


- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்