எந்த சின்னம் கிடைத்தாலும் மக்களிடம் கொண்டு சேர்ப்போம் – சின்னம் மறுக்கப்பட்டது குறித்து இன்று மதியம் நீதிமன்றத்தில் மீண்டும் முறையிடுவோம் – துரை வைகோ திருச்சியில் பேட்டி!

0
மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பதிலை மதிமுக வழக்கறிஞர்களுக்கு மின்னஞ்சல் வழியாக தேர்தல் ஆணையம் அளித்துள்ளது. எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க கோரி கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இது‌ குறித்து திருச்சி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் துரை வைகோ இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்…

- Advertisement -

தேர்தல் ஆணையம் தான் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என்று கூறியுள்ளது. இன்று பிற்பகல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது. ஏற்கனவே, தேர்தல் விதிமுறைகள் இருந்தாலும்
லாக் செய்து வைக்கப்பட்டுள்ள சின்னத்தை ரிலீஸ் செய்து மதிமுகவுக்கு வழங்குவதில் சிக்கல் உள்ளது. இது முன் காரணமாகிவிடும் என்று தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது.
தேர்தல் விதிமுறைகள் படி சட்டத்தில் வாய்ப்பு இருப்பதால் அந்த சின்னத்தை எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று எங்கள் தரப்பு வக்கீல் கேட்க உள்ளார். நீதிமன்ற தீர்ப்பை எதிர்பார்த்து இருக்கிறோம். கடந்த காலங்களை போல் இப்போது இல்லை. வேட்பாளரையும் சின்னத்தையும் நன்கு தெரிந்து கொண்டு ஓட்டு போடும் அளவிற்கு மக்கள் தெளிவாக உள்ளனர். அனைவரின் கைகளிலும் மொபைல் போன் உள்ளது எனவே 24 மணி நேரத்தில் சின்னத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க முடியும் இது தவிர, மதவாத பாஜகவை எதிர்க்கும் தனியாக திமுக அணியை மக்கள் பார்க்கின்றனர். எனவே அந்த கூட்டணியில் போட்டியிடும் மதிமுகவையும் அதன் சின்னத்தையும் மக்கள் தெரிந்து கொண்டு மக்கள் நிச்சயமாக வாக்கு அளிப்பார். தேர்தல் ஆணையம் புதிது புதிதாக காரணங்களை சொல்லி சின்னம் ஒதுக்குவதில் மெத்தனம் காட்டுகின்றனர். மதிமுக மட்டுமில்லாமல் நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும்  இதே நிலைதான் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்