திருச்சி மணிகண்டம் ஒன்றியம் அனைத்து வியாபாரிகள் நலச்சங்கம் துவக்க விழா – கோவிந்தராஜுலு பங்கேற்பு!

திருச்சி கள்ளிக்குடி மார்க்கெட்டை அரசு பள்ளி அல்லது ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்ற வேண்டும் – தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொது செயலாளர் கோவிந்தராஜுலு கோரிக்கை!

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் அங்கமான திருச்சி மணிகண்டம் ஒன்றியம் அனைத்து வியாபாரிகள் நல சங்கத்தின் துவக்க விழா மற்றும் அலுவலக திறப்பு விழா இன்று நடைபெற்றது இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு கலந்துகொண்டு புதிய சங்கத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

இவ்விழாவிற்கு அனைத்து வியாபாரிகள் நல சங்கத்தின் தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். செயலாளர் பாலசுப்பிரமணியம் வரவேற்புரை ஆற்றினார். விழாவில் காந்திமதி சக்திவேல், ஞானேஸ்வரி பாலசுப்ரமணியன், கவிதா வெங்கடாசலம் ஆகியோர் குத்து விளக்கேற்றி வைத்தனர். அதனைத் தொடர்ந்து சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட திருச்சி மண்டல தலைவர் தமிழ்ச்செல்வம் திருச்சி மாவட்ட தலைவர் ஸ்ரீதர் மாநகர தலைவர் கண்ணன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

மேலும் திருச்சி மணிகண்டம் ஒன்றிய அனைத்து வியாபாரிகளின் நல சங்கத்தின் தீர்மானங்களாக சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குவது, சங்க உறுப்பினர்கள் அனைவரையும் வணிகர் நல வாரியத்தில் இணைப்பது, சங்க உறுப்பினர்கள் உணவு சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு உணவு பாதுகாப்பு துறையின் ஃபுட் லைசென்ஸ் பெற்று தருவது, சங்க உறுப்பினர் இயற்கை எய்தினால் உதவித்தொகையாக ரூபாய் 10 ஆயிரம் வழங்குவது, அதேபோல் நலிந்த சங்க உறுப்பினர்களுக்கு வங்கி மூலம் கடன் வசதி பெற்று தருவது, சங்க உறுப்பினர்கள் கடையில் எதிர்பாராத விதமாக ஏற்படும் பிரச்சனைகளுக்கும் திருட்டு சம்பவங்களுக்கு தீர்வு காணும் விதமாக சிசிடிவி கேமரா பொருத்துவதும் மேலும் காவல்துறை மூலமாக சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதும், சாலையோர வியாபாரிகளுக்கு மாநகராட்சி மூலம் அடையாள அட்டை பெற்று தரவும், பல கோடி அரசு பணத்தில் கட்டி முடிக்கப்பட்ட கள்ளிக்குடி மார்க்கெட் திறப்பு விழா கண்டும் பூட்டியே உள்ளது அதை துறை சார்ந்த அமைச்சர் மூலமாகவும், தமிழ்நாடு முதலமைச்சர் மூலமாகவும் நமது பகுதியை சார்ந்த மக்களுக்கு பயன்பெறும் வகையிலும் ,மகளிர் அரசு மேல்நிலைப் பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க சங்க மூலம் முயற்சி மேற்கோள்ளபடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. விழாவில் திருச்சி மணிகண்டம் பகுதியில் உள்ள அனைத்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இறுதியாக திருச்சி மணிகண்டம் ஒன்றியம் அனைத்து வியாபாரிகள் நல சங்கத்தின் பொருளாளர் அசாருதீன் நன்றியுரை ஆற்றினார்.

- Advertisement -

தொடர்ந்து கோவிந்தராஜுலு செய்தியாளர்களிடம் பேசுகையில்….

திருச்சி மணிகண்டம் ஒன்றியம் அனைத்து வியாபாரிகள் நல சங்கம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மூலமாக இணைக்கப்பட்டு
வணிகர்களுக்கு பல்வேறு வகையில் உதவி செய்யும். திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ரூ.77 கோடி ரூபாய் செலவில் 2017ல் கட்டப்பட்ட கள்ளிக்குடி மார்க்கெட்டை இந்தப் பகுதி வளர்ச்சிக்காக மேல்நிலைப்பள்ளி அல்லது சுகாதாரத்துறை நிலையமாக மாற்ற வேண்டுமென அமைச்சர் பெருமக்கள் மற்றும் தமிழக முதல்வரிடம் நேரில் வலியுறுத்த உள்ளோம். மேலும் இந்த பகுதி வளர்ச்சிக்காக வளர்ச்சித் திட்டங்களை அரசு கவனம் செலுத்த வேண்டும் எனவும், வணிகர்களுக்கு உள்ள சில பிரச்சனைகளில் உணவு பாதுகாப்புத் துறை மற்றும் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள பிரச்சனைகளை அரசு ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், தமிழக முதல்வரை சென்ற வாரம் மாநிலத் தலைவர் விக்ரமராஜா உடன் சென்று சந்தித்து வணிகர்களின் பல்வேறு பிரச்சனைகளை எடுத்து கூறியுள்ளோம். அதில் வணிகர்கள் எந்த வியாபாரம் செய்தாலும் மூன்றாண்டுக்கு ஒரு முறை மட்டும் லைசன்ஸ் எடுத்தால் போதும் என்ற கோரிக்கை வைத்துள்ளோம். எங்கள் கோரிக்கையை ஏற்று அறிவிப்பு வெளியாக உள்ளது. அதனை தமிழக முதலமைச்சர் அறிவித்த பிறகு அவர்களுக்கு திருச்சியில் பாராட்டு விழா நடத்த உள்ளோம் என தெரிவித்தார். மேலும் சமீபத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மூலம் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இருந்து வணிகர்களை அழைத்து ஆடு மாடு போல் அடைத்து காலை முதல் காக்க வைத்து வெறும் 100 பேருக்கு மட்டும் தீர்வை ஏற்படுத்தி அனுப்பியுள்ளனர். இதனை மாவட்ட ஆட்சியர் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரியிடம் தெரிவித்துள்ளேன். மேலும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அவர்களிடமும் புகார் தெரிவித்துள்ளதாக தெரிவித்தார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்