திருச்சி லால்குடி அரசுப் பள்ளியில் பிளஸ் 2 பயின்று இறுதியாக தங்களுடைய தேர்வு முடியும் நேரத்தில் தான் பயின்ற பள்ளி வகுப்பறையை ஒரு கோயிலாக நினைத்து பள்ளிக்கு வெள்ளையடித்து வண்ணம் பூசிய 4 மாணவர்களுடைய சிறப்பான செயல் பாராட்டுக்குரியது.
இதுகுறித்து பா.ஜான் ராஜ்குமார் கூறுகையில்
அரசுப் பள்ளி மாணவர்களைப் பற்றி சமூக ஊடகங்கள், வலைத்தளத்தில் தவறான செய்திகளை பரப்பி வரும் நேரத்தில் திருச்சி மாவட்டம் என்றைக்குமே தமிழகத்தில் முன்னணி மாவட்டமாக இருந்து வருகிறது. அந்த வகையில் திருச்சி லால்குடி அரசு பள்ளி மாணவர்கள் தங்கள் வகுப்பறையில் பயின்ற நினைவுகளை நினைவு படுத்தும் வகையில் பள்ளிக்கு வண்ணம் பூசி சிறப்பாக பதிவு செய்திருக்கிறது பாராட்டுக்குரியது.
இந்த பள்ளி மாணவர்களின் செயல் தமிழகத்திற்கே ஒரு முன்மாதிரியான செயலாக இருக்கிறது. இந்த மாணவர்கள் தங்கள் பொறுப்புணர்ந்து பாராட்டுக்குரிய சிறப்பான செயல் செய்ததற்கு பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
லால்குடி பள்ளி மாணவர்கள் வண்ணம் பூசிய செயல் சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருவது பாராட்டுக்குரியது.
பொதுமக்கள் அனைவரும் மாணவர்களை பாராட்டி வருகிறார்கள். தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்த்து பயன் பெறும்படி பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறேன். இன்றைக்கு தமிழகத்தில் பல்வேறு உயர் பதவிகளை வகிக்கக்கூடிய அனைத்து அதிகாரிகள், ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் அனைவருமே அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
என சமூக ஆர்வலர் பா.ஜான் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.