முக்கொம்பு மேலணைக்கு நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி 1.22 லட்சம் கன அடியாக உள்ளது.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகரித்து வருகிறது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து, திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணைக்கு நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி 1.22 லட்சம் கன அடியாக உள்ளது.
முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரியில் 28,000 கன அடி நீரும், கொள்ளிடத்தில் 93,000 கன அடி நீரும், கிளை வாய்க்கால்களில் 1000 கன அடி நீரும் தற்போது திறந்து விடப்படுகிறது. நீர் வரத்தும் நீர் திறப்பும் தொடர்ந்து அதிகரிக்கும் என்பதால்
காவிரி மற்றும் கொள்ளிடம் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமெனவும், ஆற்றில் குளிக்கவோ, செல்பி எடுக்கவோ கூடாது என திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் காவிரி, கொள்ளிடம் ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் காவிரி கரையோரத்தில் முகாமிட்டுள்ளனர். தொடர்ந்து நீர்வளத்துறை அதிகாரிகள் நீரின் அளவை கண்காணித்து வருகின்றனர்.
Comments are closed.