திருச்சியில் கிங்டம் திரைப்படத்தை திரையிட கூடாது – நாம் தமிழர் கட்சியினர் திரையரங்க நிர்வாகத்திடம் மனு!

- Advertisement -

தெலுங்கு திரைப்படமான கிங்டம் தமிழகத்தில் இன்று வெளியாகி உள்ளது. இந்த படம் ஈழத் தமிழர்களை இழிவுபடுத்தும் விதமாக அமைந்துள்ளதாக பல்வேறு தமிழ் அமைப்புகளும், கட்சிகளும் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் இந்த திரைப்படத்தை திரையரங்கில் திரையிடக்கூடாது என வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே கிங்டம் திரைப்படம் வெளியாகி உள்ள சோனா மீனா திரையரங்க உரிமையாளரை இன்று நேரில் சந்தித்து மனு அளித்தனர். உடனடியாக அந்த படத்தை திரையரங்கில் இருந்து எடுக்க வேண்டும் எனவும், மீண்டும் தொடர்ச்சியாக அந்த படம் திரையிடப்பட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து திரையரங்கம் சார்பில் அங்கு வைக்கப்பட்டிருந்த அப்படத்தின் பேனர் அகற்றப்பட்டு, காட்சிகள் ரத்து செய்யப்பட்டது.

- Advertisement -

பின்னர் நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் சரவணன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,…

கிங்டம் திரைப்படம் முழுக்க முழுக்க ஈழத் தமிழர்களை கொச்சைப்படுத்துவது போல உள்ளது. தமிழகம் முழுவதும் இந்த படத்தினை தடை செய்ய வேண்டும். திருச்சியில் திரையிடப்பட்டுள்ள இந்த படத்தை ரத்து செய்ய வேண்டும் என மேலாளரிடம் மனு கொடுத்துள்ளோம். தமிழர்களையும், இலங்கைத் தமிழர்களையும் கொச்சைப்படுத்துவது போல, 60 ஆண்டுகால வரலாற்றை கொச்சைப்படுத்துவது போல இந்திய சினிமாக்கள் தயாரிக்கப்படுகின்றன. போராட்டங்கள் நடத்துவதற்கு முன்பு படத்தை எடுக்கும் இயக்குனர்கள் வெளியிடும் தயாரிப்பாளர்கள் அதில் உண்மை கதை இருக்கிறதா என ஆராய்ந்து வெளியிட வேண்டும். இலங்கை தமிழர் போரில் இறந்த இரண்டரை லட்சம் பேருக்கு நீதி கிடைக்கவில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் தொடர்ந்து இதுபோன்று படங்களால் இலங்கை தமிழர்களை அவமதிப்பதை ஒத்துக் கொள்ள மாட்டோம். தவறான புரிதல் உள்ள ஒரு படத்தை அந்த தயாரிப்பாளர் எடுத்து இருக்கிறார். தமிழர்களை அவமதிக்கும் விதமாக திரைப்படம் எடுப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் இது போராட்டமாக வெடிக்கும் என்றார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்