கோவில் அறங்காவலர் 120 பவுன் நகை, 40 லட்சம் பணம் கையாடல் – திருச்சி மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் புகார்
கோவில் அறங்காவலர் 120 பவுன் நகை, 40 லட்சம் பணம் கையாடல் – திருச்சி மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் புகார்
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மால்வாய் கிராமத்தில் பூமி பாலகர் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் பூசாரியாக செயல்பட்டு வந்த பாஸ்கர் என்பவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கோவிலின் திருப்பணி என்ற பெயரில் பொதுமக்களிடம் பணம் வசூல் செய்தும், கோவில் வங்கி கணக்கில் இருந்த பணத்தையும் கையாடல் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் கோவில் குடிப்பாட்டு மக்கள் பூசாரியை கோவில் நிர்வாகத்தில் இருந்து விலக்கி கிராம குடிபாட்டு மக்களே நிர்வாகம் செய்ய வேண்டி வழக்கு தொடுத்தனர்.
இந்த வழக்கில் பூசாரி வகையரா தரப்பில் ஒருவரும் கோவில் குடிப்பாட்டு மக்கள் தரப்பில் ஒருவரும் கோவில் நிர்வாகத்தை கவனித்துக்கொண்டு சமரசமாக கோவில் திருவிழாக்களை நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் பூசாரி பாஸ்கர் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் கோவிலை ஒப்படைத்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலைத்துறை பாஸ்கரை கோவில் தர்மகர்த்தாவாக நியமித்துள்ளது.
மேலும் மற்றொரு தரப்பினரான குடிபாட்டு மக்கள் ஒருவரில் அறங்காவலர் குழுவில் நியமிக்காமல் காலதாமதம் செய்து வந்திருக்கிறது.
இதனை அடுத்து கோவில் நிர்வாக தர்மகர்த்தாவாக செயல்பட்டு வந்த பாஸ்கர் மேலும் கோவில் ஆபரணங்கள் மற்றும் வங்கியில் இருந்த பணத்தை கையாடல் செய்ததாக கிராம மக்கள் குற்றம்சாற்றி வருகின்றனர்.
மேலும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அறநிலையத்துறையிடம் பொதுமக்கள் புகார் அளித்தும் புகாரை மெத்தனபோக்கை கையாண்ட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கண்துடைப்பிற்காக குற்றம் சாட்டப்படும் பாஸ்கரை துறை ரீதியாக நடவடிக்கை எடுத்துள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
தொடர்ந்து கல்லக்குடி காவல் நிலையத்தில் பாஸ்கரன்,தனபால், விக்னேஷ், ராஜன், எழில் கென்னடி ஆகியோர் மீது புகார் கொடுக்கப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கூறி லால்குடி நடுத்தெரு மால்வாய் பகுதியை சேர்ந்த சின்னதுரை என்பவரின் மகன் செந்தில்குமார் என்பவர் அப்பகுதி மக்களுடன் சேர்ந்து சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் அலுவலகத்தில் புகார் மனுவை அளித்தனர்.
இந்து சமய அறநிலையத்துறை பெரம்பலூர் உதவி ஆணையர் உமா மற்றும் கோவில் அறங்காவலர் பாஸ்கரன் மீது துரை ரீதியாகவும் மற்றும் காவல் துறை மூலமாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த கோவிலில் சுமார் 120 பவுன் நகைகள் மற்றும் 48 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் கையாடல் செய்யப்பட்டிருப்பதாகவும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
பேட்டி…
திரு.செந்தில்குமார், நடுத்தெரு மால்வாய், லால்குடி, திருச்சி.
Comments are closed.