சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ ரிலீஸ் தேதியை படக்குழுவினர் மாற்றம்.
சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ ரிலீஸ் தேதியை படக்குழுவினர் மாற்றம்.
ரஜினியின் ‘ஜெயிலர்’ படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என்று நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ ரிலீஸ் தேதியை படக்குழு தற்போது மாற்றியுள்ளது.
சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிக்கும் ‘மாவீரன்’ படத்தை ‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்குகிறார். இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடிக்கின்றனர். விது அய்யனார் ஒளிப்பதிவு செய்ய ஃபிலோமின்ராஜ் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கில் பைலிங்குவல் படமாக உருவாகி வருகிறது.
தெலுங்கில் இந்தப் படத்திற்கு ‘மாவீருடு’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ‘ஆடை’, ‘மண்டேலா’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த பரத் ஷங்கர் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் பாடலான ‘சீன் ஆ.. சீன்..ஆ’ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றது. தற்போது இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் தற்போது அறிவித்துள்ளனர். அதன்படி ‘மாவீரன்’ திரைப்படம் வரும் ஜூலை 14ஆம் தேதி வெளியாக உள்ளதாக சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்’ படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்த நிலையில், ’மாவீரன்’ படம் முன்கூட்டியே ஜூலை 12ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.