ஏற்றிய ஏணியை எட்டி உதைக்கும் ரகுபதிக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் – திருமயத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாருமான எடப்பாடி பழனிச்சாமி மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சார பயணத்தை தொடங்கி தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகின்ற நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் அண்ணா சீரணி அரங்கத்தின் முன்பாக எடப்பாடி பழனிச்சாமி பேசினார் அவர் பேசும்போது திருமயம் தொகுதி அதிமுகவின் கோட்டை கடந்த இரண்டு முறை குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வாய்ப்பு நழுவ விட்டோம் அதனால் இங்கு ஒருத்தர் வெற்றி பெற்றுள்ளார் தன்னை ஏற்றிய ஏணியை எட்டி உதைக்கும் ரகுபதிக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் அந்த காலத்தில் எட்டப்பன் என்று கூறுவார்கள் அப்படிப்பட்ட எட்டப்பன் தான் இந்த தொகுதியில் அமைச்சராக இருக்கிறார் ரத்தத்தை நீராக சிந்தி உழைப்பை கொடுத்து தான் அதிமுகவில் ரகுபதியை எம்எல்ஏ அமைச்சர் ஆக்கினார்கள் ரகுபதிக்கு அதிமுகவை விமர்சனம் செய்ய எந்த அருகதையும் இல்லை ரகுபதி குரங்கு போல் மரத்துக்கு மரம் தாவி திமுகவுக்கு சென்று உள்ளார் எந்த அளவுக்கு கூறுகிறீர்களோ அந்த அளவுக்கு தான் பதவி உங்களிடம் இருக்கும் கூறவில்லை என்றால் பதவி போய்விடும் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டு இன்று ஆட்சி அதிகாரத்தின் பங்கு பெற்ற எட்டப்பன் போல் செயல்படுகின்ற ரகுபதிக்கு அதிமுகவை விமர்சிக்க யோக்கியத்தையும் இல்லை அருகதையும் இல்லை ரகுபதி நன்றி மறந்து அதிமுகவை விமர்சனம் செய்கிறார் இது பாதக செயல் உங்களுக்காகத்தான் திருவள்ளுவர் நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்று மறப்பது நன்றன்று என்று கூறி வைத்துவிட்டு சென்றுள்ளார் ரகுபதி வழி தவறி சேராத இடத்தில் சேர்ந்து விட்டார் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயரில் ஜே ஜே கல்லூரி வைத்துக் கொண்டு அதிமுக இயக்கத்தை பேசுவதா என்றும் இன்னும் பல கருத்துக்களையும் எடுத்து கூறினார் மேலும் நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வருகையில் மாடியில் இருந்து மலை தூவி வரவேற்றனர் மக்கள் பார்க்கும் வண்ணம் கலை நிகழ்ச்சி நடைபெற்றது மேலும் மக்கள் கூட்டம் வெள்ளத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், தொழிலதிபர் குமாரசாமி, முன்னாள் வீட்டு வசதி வாரிய தலைவறரும் தெற்கு மாவட்ட கழகச் செயலாளர்பிகே வைரமுத்து, தெற்கு ஒன்றிய செயலாளர்
ஏ எல் ராமு வடக்கு ஒன்றிய செயலாளர்
பி எல் ஆர் பழனிவேல் அரிமளம் ஒன்றிய செயலாளர் திலகர் மற்றும் அதிமுக மாநில மாவட்ட நகர கிளை நிர்வாகிகள் மகளிர் அணியினர் பெண்கள் பாசறை மற்றும் அனைத்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Comments are closed.