ஆனி மாத வளர்பிறை பிரதோஷம் – திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில் நந்தி பகவானுக்கு மகா அபிஷேகம் – பெருந்திரளான பக்தர்கள் ஓம்நமச்சிவாய என்ற பக்திகோசத்துடன் வழிபாடு

- Advertisement -

ஆனி மாத வளர்பிறை பிரதோஷம் – திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில் நந்தி பகவானுக்கு மகா அபிஷேகம் – பெருந்திரளான பக்தர்கள் ஓம்நமச்சிவாய என்ற பக்திகோசத்துடன் வழிபாடு

- Advertisement -

பிரதோஷ நாளில் சிவபெருமானையும், நந்தி பெருமானையும் வழிபாடு செய்தால் அனைத்து விதமான தோஷங்களும் நீங்கி சகல நன்மை கிட்டும் என்பது நம்பிக்கை.

ஆனி மாத வளர்பிறை பிரதோஷ தினமான இன்று பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக விளங்கும் திருச்சி திருவாணைக்காவல் அகிலாண்டேசுவரி உடனுறை ஜம்புகேசுவரர் ஆலயத்தில் நந்திபெருமானுக்கு பஞ்சாமிர்தம், பால், தயிர், சந்தனம், மஞ்சள், பன்னீர், இளநீர், திரவியபொடி உள்ளிட்ட வாசனை திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் வில்வ இலைகளை சாத்தி வழிபாடு செய்தனர்.

தொடர்ந்து நந்தி பகவானுக்கும், சிவபெருமானுக்கும் மகாதீபாராதனைகள் நடைபெற்றது. இதில் பெருந்திரளான பக்தர்கள் வருகை தந்து ஓம் நமச்சிவாய கோஷத்துடன் மனமுருக  வழிபாடு செய்தனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்