திருச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர் முன்னேற்றம் சங்கம் சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல் – அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்!
கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாக்க திருச்சியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பு போக்குவரத்து கழக தொழிலாளர் முன்னேற்றம் சங்கம் சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல் இன்று தொடங்கப்பட்டது. இந்நிகழ்வில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.
திருச்சி மண்டல போக்குவரத்து பொதுச்செயலாளர் குணசேகரன் ஏற்பாட்டில் திறக்கப்பட்ட தண்ணீர் பந்தலில் தர்பூசணி, வெள்ளரி, இளநீர், நுங்கு, உள்ளிட்ட ஜூஸ் வகைகள் மற்றும் நீர் மோர் ஆகியவற்றை அமைச்சர் கே.என்.நேரு பொதுமக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.