திருச்சி டிவின்ஸ் கார் ஷோரூமில் மெகா எக்ஸ்சேஞ்ச் மேளா – நடிகை அஸ்மிதா சிங் தொடங்கி வைத்தார்!

திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் ஜமால் முகமது கல்லூரி அருகில் டிவின்ஸ் கார் ஷோரூம் செயல்பட்டு வருகிறது. இந்த ஷோரூமில் ஆண்டின் கடைசி மெகா
எக்ஸ்சேஞ்ச் மேளா கொண்டாட்டம் வருகிற 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இதையொட்டி நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக
திரைப்பட நடிகை அஸ்மிதாசிங், திருச்சி மாநகராட்சி
மேயர் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டு எக்ஸ்சேஞ்ச் மேளாவை தொடங்கி வைத்து கார் ஷோருமை பார்வையிட்டனர்.

- Advertisement -

நிகழ்ச்சிக்கு வந்த வாடிக்கையாளர்களை டுவின்ஸ் கார் ஷோரூம் உரிமையாளர் பக்ருதீன் வரவேற்றார். இதில் ஜமால் முகமது
கல்லூரி செயலாளர் காஜா நஜிமுதீன், திருச்சி கார் அசோசியேஷன் தலைவர் கே.ஜே.சுரேஷ் பாபு என்கிற ராஜா உள்பட பலர் கலந்து
கொண்டனர். பின்னர் வாடிக்கையாளர்கள் கார் ஷோரூமை பார்வையிட்டு தங்களுக்கு விருப்பமான கார்களை தேர்வு செய்தனர்.

இது குறித்து கார் ஷோரூமின் உரிமையாளர் பக்ருதீன் கூறுகையில்…

இந்த எக்ஸ்சேஞ்ச் மேளாவில்
வாடிக்கையாளர்கள் தங்களது விருப்பமான கார்களை தேர்ந்தெடுக்கும் வகையில் 100-க்கும் மேற்பட்ட கார்கள் ஒரே இடத்தில் காட்சிபடுத்தப்பட்டுள்ளன. கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 90 சதவீத நிதி உதவி வழங்கப்படுகிறது. 6 மாத வாரண்டியும் அளிக்கப்படுகிறது. மேலும் ரூ.5 லட்சத்திற்குள் கார் வாங்குபவர்களுக்கு டைட்டன் வாட்ச், ரூ.5 லட்சத்திற்கு மேல் கார் வாங்குபவர்களுக்கு சைக்கிள், ரூ.10 லட்சத்திற்கு மேல் கார் வாங்குபவர்களுக்கு தங்கநாணயம் இலவசமாக வழங்கப்படுகிறது. அடுத்த மாதம் (ஜனவரி) 1 ஆம் தேதி குலுக்கல் முறையில் ஒருநபருக்கு ஹோண்டா ஆக்டிவா இலவசமாக வழங்கப்படுகிறது என்றார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்