இயக்குனர் ஆர்.ஏ.தாமஸ் இயக்கிய “கனவு” சமூக விழிப்புணர்வு குறும்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

மதுரை விஸ்வா கிரியேஷன்ஸ் Rtn.விஸ்வாநாராயன் மற்றும் Er.B.செந்தில்குமார் ஆகியோர் தயாரிப்பில் தேசிய மற்றும் மாநில விருது பெற்ற குறும்பட நடிகரும் & இயக்குனரும், மாற்றம் அமைப்பின் நிறுவனருமான ஆர்.ஏ.தாமஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள குறும்படம் “கனவு”. பெண் குழந்தையின் கல்வி, குழந்தை தொழிலாளர் குறித்து எடுக்கப்பட்ட சமூக விழிப்புணர்வு குறும்படமான இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், உலக மனித உரிமைகள் தினமான இன்று வெளியிடப்பட்டது.

அனைத்து தரப்பு மக்களுக்கும் சமமான அடிப்படை உரிமைகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஜனா சபை அறிவிப்பின் படி ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10 ஆம் தேதி மனித உரிமைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றும் பல்வேறு வகைகளில் குழந்தைகளுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் நடைபெற்று வருகிறது. இதனை வெளிபடுத்தும் விதமாக எடுக்கப்பட்டது தான் கனவு குறும்படம். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடும் நிகழ்ச்சி சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் ஸ்டியோவில் நடைபெற்றது.

- Advertisement -

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பேட்ட, ஜிகர்தண்டா, தானா சேர்ந்த கூட்டம், காக்கி சட்டை, அண்ணாத்த, அரண்மனை உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் சூப்பர் ஹிட் திரைப்பட பாடல்களை படியுள்ள பிரபல திரைப்பட பின்னணி பாடகர், பாடலாசிரியர், நடிகருமான அந்தோணி தாசன் மற்றும் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரைஹானாவின் பேசுவது கிளியா திரைப்படம் மூலமாக அறிமுகமான சைரன், யாதும் ஊரே, சாரல், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட திரைப்படங்களின் பாடலாசிரியர் வசனகர்த்தா திரை எழுத்தாளர் முருகன் மந்திரம் ஆகியோர் கலந்து கொண்டு “கனவு” குறும்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தினர்.

மேலும் இந்நிகழ்வில் போட் திரைப்படத்தின் அசோசியேட் டைரக்டர் சசி, குறும்பட இயக்குனர் சாய் பரஞ்ஜோதி, தயாரிப்பாளர் வாசு, நடிகர் விக்னேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் “கனவு” குறும்படம் 2025 ஆம் ஆண்டு சர்வதேச தேசிய அளவில் நடைபெறவுள்ள பல்வேறு குறும்பட போட்டிகளில் கலந்து கொள்ள தேர்வாகி உள்ளது என படத்தின் இயக்குனர் ஆர்.ஏ.தாமஸ் தெரிவித்தார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்