சட்டமேதை பாபாசாகேப் அம்பேத்கரை பாராளுமன்றத்தில் அவமரியாதை செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மேயர் அன்பழகன் முன்னிலை வகித்தார். இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, சவுந்திரபாண்டியன் மற்றும் மண்டலத் தலைவர்கள், கவுன்சிலர்கள், பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
Comments are closed.