டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினம் – திருச்சியில் எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்!

டிசம்பர் 6, 1992 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்து திருச்சியில் எஸ்டிபிஐ கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தமீம் அன்சாரி தலைமை வகித்தார். வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். எஸ்டிபிஐ கட்சியின் தமிழ் மாநில துணைத்தலைவர் அப்துல் ஹமீது எழுச்சி உரையாற்றினார். தொடர்ந்து திருச்சி அதாயி அரபிக் கல்லூரி கல்வி குழுமத்தின் தாளாளர் இமாம் முஹம்மது ஃபைஜூல் பாரி மற்றும் விமன் இந்தியா மூவ்மெண்ட் மாநில செயற்குழு உறுப்பினர் ஆலிமா மெஹராஜ் பானு ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

முன்னதாக வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் அசாருதீன் வரவேற்புரை வழங்கினார். திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி தலைவர் ஷேக் முகம்மது மற்றும் கிழக்கு தொகுதி தலைவர் சபியுல்லா ஆகியோர் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் பாபர் மசூதி இடித்து 32 ஆண்டுகள் ஆனதை கண்டித்தும், இன்று பாசிச எதிர்ப்பு தினம் என கோஷங்களை எழுப்பினர். மாவட்ட பொதுச்செயலாளர் முகமது சித்திக் ஆரப்பாட்டத்தை தொகுத்து வழங்கினார்.

- Advertisement -

மேலும் இந்நிகழ்வில் மாவட்ட துணை தலைவர் பிச்சை கனி, SDTU மாநில செயலாளர் முகம்மது ரபீக், மாவட்ட செயலாளர்கள் மதர் ஜமால் முஹம்மது, தளபதி அப்பாஸ், ஏர்போர்ட் மஜீத், மாவட்ட பொருளாளர் நியாமத்துல்லா, வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் அசாருதீன், தெற்கு மாவட்ட செய்தி தொடர்பாளர் பக்ருதீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பொன்னகர் ரபீக், சதாம் உசேன், அப்துல் காதர் (பாபு), மாவட்ட ஊடக அணி தலைவர் உபைதுர் ரஹ்மான், தொண்டரணி மாவட்ட தலைவர் ஆரிப், சுற்றுச்சூழல் அணி மாவட்ட தலைவர் ரஹ்மத்துல்லா, SDTU தொழிற்சங்க மாவட்ட தலைவர் முஸ்தபா, மாவட்ட செயலாளர் சர்க்கரை மீரான், விமன் இந்தியா மூவ்மெண்ட் மாவட்ட தலைவர் தௌலத் நிஷா, ஸ்ரீரங்கம் தொகுதி தலைவர் முகமது யாசர், மணப்பாறை தொகுதி தலைவர் கோயா, திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் ஜவஹர் அலி, வடக்கு மாவட்ட செயலாளர் அலாவுதீன்,
வடக்கு மாவட்ட பொருளாளர் தஸ்தகீர், வர்த்தக அணி மாவட்ட செயலாளர்கள் சேக் அப்துல்லா, அப்துல் மாலிக், கல்வியாளர் அணி மாவட்ட தலைவர் அப்துல் அஜீஸ் மற்றும் நிர்வாகிகள், தொகுதி நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், பொதுமக்கள், ஜமாத்தார்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக மேற்கு தொகுதி தலைவர் சையது முஸ்தபா நன்றியுரையாற்றினார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்