திருச்சியில் ஆசிய ஆராய்ச்சி விருதுகள் வழங்கும் விழா – அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு!
2024 ஆம் ஆண்டிற்கான சர்வதேச அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
இந்நிகழ்வில் 10 நாடுகளைச் சேர்ந்த சிறப்புத் தலைவர்களை கௌரவிக்கும் விதமாக ஜப்பானைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் ஷிஜியோ சுடோ, மெக்ஸிகோவைச் சேர்ந்த டாக்டர் லூயிஸ் ஏ கலீசியா லூனா, துருக்கியைச் சேர்ந்த டாக்டர் லெவென்ட் பாயம், இத்தாலியைச் சேர்ந்த ரோக்கோ லனாட்டா மற்றும் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த டாக்டர் குலவுண்டா அமி தத்தியானா ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
மேலும் இந்நிகழ்வில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு சிறந்த கல்வியமைச்சர் என்ற பட்டத்தை ஆசியா ஆராய்ச்சி விருதுகள் நிர்வாக இயக்குநர் ராம்குமார் வழங்கி கவுரவித்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் கலந்து கொண்டனர்.
Comments are closed.