ஆடி வெள்ளி வழிபாடு – சமயபுரம் மாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்!
ஆடி வெள்ளி வழிபாடு – சமயபுரம் மாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்!
தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலிலுக்கு, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் வருகை தந்து அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அம்மன் வழிப்பாட்டிற்கு சிறப்புமிக்க நாளான இன்று ஆடி வெள்ளியை முன்னிட்டு, சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு திரளான பக்தர்கள் வருகை தந்தனர். கோவில் முன் மண்டபத்தில் நெய்விளக்கு, சூடம் ஏற்றி வழிப்பட்ட பக்தர்கள் தொடர்ந்து நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.
மேலும் அலகு குத்தி, பால்குடம் எடுத்தும், அக்னிச்சட்டி ஏந்தியும் பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் தண்ணீர் மற்றும் உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆடி மாத வெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் பிரகாஷ், கோவில் அறங்காவலர் குழு தலைவர் இளங்கோவன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
ஆடி வெள்ளி குறித்து சமயபுரம் கோவில் அர்ச்சகர் திருமேனிநாதன் பேசுகையில், ..
ஆடி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் இன்று அதிக அளவில் உள்ளது. பக்தர்களின் பிரார்த்தனை நிறைவேற வேண்டுமென அம்மனிடம் வேண்டிக் கொண்டேன். இந்த கோவிலின் விசேஷம் என்பது விபூதி தான். விபூதி மட்டுமே இங்கு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. நோயாளிகள் மற்றும் அம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த விபூதி குணப்படுத்தும். அனைவரும் நலமாக இருக்க வேண்டி இன்று பிரார்த்தனை நடைபெற்றது என தெரிவித்தார்.
Comments are closed.