குத்தகை விவசாயிகளுக்கு குந்தகம் விளைவிக்கும் அரசை கண்டித்து ஆடு,மாடுகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
திருச்சி காட்டூர் பாப்பாக்குறிச்சியில் வருசை ராவுத்தர் வாரிசுகளுக்கு சொந்தமான 31.5 ஏக்கர் நிலத்தை வருவாய்த்துறை மூலம் முறைகேடாக பட்டா மாற்றம் செய்து,
சுமார் 100 ஆண்டு காலமாக முறையாக குத்தகை செலுத்தி விவசாயம் செய்து பிழைத்து வந்த 24 ஏழை விவசாயிகளை நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி, வெளியேற்றி அவர்களின் வாழ்வாதாரத்தை பறிப்பதையும்,
காளிமுத்து என்பவருக்கு எதிராக
வருசை ராவுத்தருக்கு சொந்தமான நிலத்தை வேலி அமைத்துக் கொள்ளலாம் என்ற உத்தரவை வைத்துக் கொண்டு அனைத்து
24 குத்தகை விவசாயிகளையும் குத்தகை விவசாயிகள் பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிராக சட்ட விரோதமாக காவல்துறை வெளியேற்றியதையும், வயல் பகுதியில் அடையாளம் தெரியாத நூற்றுக்கும் மேற்பட்டோர்களை தங்க வைப்பதை
கண்டித்தும்
2023 ம் ஆண்டு வரை முறையாக குத்தகை செலுத்தியும், வேலி அமைக்கிறேன் என்றுச் சொல்லி சாகுபடி வயல்களை பயிர்களை நாசப்படுத்தி, வாய்க்கால்களை மூடி அராஜகம் செய்வோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும்,
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் காட்டூர் பகுதி குழு தலைமையில்
ஆடு, மாடுகளோடு குடும்பத்துடன் விவசாயிகள் இன்று காட்டூர் கடைவீதியில்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு பகுதி செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட தலைவர் கே. சி.பாண்டியன், மாவட்ட பொருளாளர் தனபால்,
அடிமனை பயனாளிகள் மற்றும் குத்தகை விவசாயிகள் சங்க மாநில தலைவர் செல்வம், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜா,பகுதி செயலாளர் மணிமாறன் பகுதிக்குழு உறுப்பினர் நல்லையா, குத்தகைதாரர்கள் சொக்கலிங்கம் ஆகியோர் பேசினர். முடிவில் ராமலிங்கம் நன்றி கூறினார்.
Comments are closed.