மன உளைச்சல் காரணமாக பணி செய்ய இயலாத சூழ்நிலையில் எனக்கு விருப்ப ஓய்வு அளிக்குமாறு டிஎஸ்பி ஒருவர் உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்
திருச்சி மாவட்ட காவல்துறையில் மாவட்ட குற்றப்பிரிவில் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் பரத் ஸ்ரீனிவாஸ் இவர் 1997 ஆம் ஆண்டு உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்து தற்பொழுது துணை கண்காணிப்பாளராக இருந்து வருகிறார் இந்த நிலையில் தன்னுடைய குடும்ப சூழ்நிலை மற்றும் மன உளைச்சல் காரணமாக தொடர்ச்சியாக தன்னால் பணி செய்ய இயலாத சூழ்நிலை உள்ளது எனவே தான் விருப்ப ஓய்வில் செல்ல விரும்புகிறேன் எனவே எனக்கு விருப்ப ஓய்வு செல்ல அனுமதி வழங்குமாறு உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அவர் கடிதம் எழுதியுள்ளது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தனிப்பட்ட ரீதியான காரணங்களால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதா அல்லது பணி சுமை காரணமாக மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து முழுமையான விவரங்கள் தெரியவில்லை.
Comments are closed.