கடியாப்பட்டியில் இடுகாடு என்ற கப்றுஸ்தான் கிடையாது, குறை தீர்க்கும் முகாமில் மனு 30 நாட்களில் பதில் அளிக்கப்படும். அதிகாரி விளக்கம்
அரிமளம் ஒன்றியம் கடியாபட்டியில் குறை தீர்க்கும் முகாமில் ஜமாத் தலைவர் கபூர் மனு ஒன்றைக் கொடுத்தார் அதில் இஸ்லாமிய மக்களுக்காக இடுகாடு என்ற கப்றுஸ்தான் கிடையாது எனவும் இறந்த பின்னர் உடலை அடக்கம் செய்வதற்கு கடியாப்பட்டியில் இடுகாடு இல்லை எனவும் உடலை அடக்கம் செய்வதற்கு கடியாபட்டியில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருமயத்திற்கு உடலை அடக்கம் செய்ய கொண்டு செல்ல வேண்டிய சூழ்நிலை இருப்பதால் இதனால் ஏழை எளிய இஸ்லாமிய மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள் எனவே அரசு கடியாப்பட்டியில் இஸ்லாமியருக்கு கப்றுத்தான் அமைக்க இலவசமாக காலியிடம் வழங்க வேண்டும் என்று ஜமாத் தலைவர் கபூர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார் மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரி விசாரித்து 30 நாட்களில் மனுதாரர் ஜமாத் தலைவருக்கு பதில் தரப்படும் என கூறினார்.
Comments are closed.