சாக்கடையை சுத்தம் செய்யாமல் கிடப்பில் போடும் பேரூராட்சி பொதுமக்கள் வருத்தம்

- Advertisement -

சாக்கடையை சுத்தம் செய்யாமல் கிடப்பில் போடும் பேரூராட்சி பொதுமக்கள் வருத்தம்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சந்தைப்பேட்டையில் அரசு மருத்துவமனை வீதி அண்ணா நகர் செல்லும் சாலையில் பத்து நாட்களுக்கு முன்பு சாக்கடை கழிவு நீர் சுத்தம் செய்யப்பட்டு அதில் உள்ள கழிவுகள் எல்லாம் ரோட்டின் ஓரத்தில் போட்டு இருக்கின்றார்கள் அந்த ரோட்டு ஓரத்தில் இருந்த செடிகளை கூட வெட்டாமல் கழிவுநீரில் உள்ள கழிவுகளை அள்ளிப் போட்டு இருக்கின்றார்கள் அந்த இடத்தை இதுவரையிலும் சுத்தம் செய்யப்படவில்லை பேரூராட்சி நிர்வாக அலுவலர்கள் உடனடியாக சீர் செய்ய வேண்டுமாய் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கேட்டுக் கொள்கின்றார்கள் மேலும் திருமயம் பஸ் ஸ்டாண்டில் இருந்து கருங்குளம் செல்லும் கழிவு நீர் வாய்க்கால் பிளாஸ்டிக் கழிவுகளால் அடைபட்டு தேங்கி கிடக்கிறது இதனால் மாலை நேரங்களில் கொசுத்தொல்லை மற்றும் துர்நாற்றம் வீசுகிறது இதனை பேரூராட்சி நிர்வாகம் கவனிக்குமா! உடனடியாக கழிவு நீர் வாய்க்காலில் தூர்வாரி அப்பகுதி மக்களின் சுகாதார வசதியை மேம்படுத்த வேண்டுமென

- Advertisement -

என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள்கள் கேள்வி எழுப்பி உள்ளனர், பேரூராட்சி நிர்வாகம் இதற்கு உடனடி தீர்வு ஏற்படுத்தவில்லை என்றால் அடுத்த கட்டமாக பெரிய அளவில் போராட்டம் நடத்தப் போவதாக சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் பேசிக் கொள்வதாக கூறப்படுகிறது

 

செய்தி கண்ணதாசன்

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்