சுதந்திரப் போராட்ட வீரர், கப்பலோட்டிய தமிழர் என்ற பெருமைக்குரியவருமான வ.உ.சிதம்பரம் பிள்ளையின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் உள்ள அவரது வெண்கலசிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பாரதிய ஜனதா கட்சியின் மாநகர் மாவட்ட முன்னாள் இளைஞர் அணி தலைவர் சுதாகர் என்கிற வெங்கடேசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல், பல்வேறு கட்சிகளின் சார்பில் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.